Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்னென்ன தானங்கள்?

 

புண்ணிய காலங்களில் செய்யப்படும் தானங்களுக்கு, சாதாரண காலங்களில் கிடைப்பதைவிட பன்மடங்கு புண்ணியம் உண்டு என்கின்றன ஞான நூல்கள். எனவே, மகாமக தினத்தில் திருக்குடந்தை தரிசனம் - தீர்த்தமாடலுடன், தானங்கள் செய்வதும் விசேஷம் எனச் சொல்லி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 20 வகை தானங்களை விளக்குவார்கள் பெரியோர்கள். அவை:

பூமி தானம், திருமணப் பொருட்களை தானம் செய்வது, ஸ்வர்ண தானம், யக்ஞோபவீத தானம் [பூணூல்], கோ தானம், அஸ்வ தானம் [குதிரை], வ்ருஷப தானம் [காளை], அன்ன தானம்,  பாயஸ தானம், தான்ய தானம், கல்ப விருக்ஷ தானம் [தென்னங் கன்று], குப்த தானம், சந்தன தானம், நல்முத்து தானம்,  நவரத்ன தானம், தேன் தானம், எள்ளு தானம், மாதுளம்பழம் தானம், உப்பு தானம் மற்றும் பதினாறு வித பழங்களை பதினாறு பேருக்கு தானம் அளிப்பது.

குப்த தானம் என்றும் ஒன்று உண்டு. அதாவது பூசணிக்காய் அல்லது பலாப்பழம் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஒற்றை ரூபாய் அளவுக்கு துளையிட்டு, அதில் ரத்னம், ஸ்வர்ணம், வைரம், வைடூரியம், வெள்ளி, முத்து ஆகியவற்றை நிரப்பி, மீண்டும் துளையை மூடிவிட்டு அப்படியே தானம் வழங்குவதற்கு குப்த தானம் என்று பெயர்