Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகாமகத்துக்கு இயங்கும் சிறப்பு ரயில்கள் விவரம்!

கும்பகோணம் மகாமக விழா கடந்த 13–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 22–ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருச்சியில் இருந்தும், தஞ்சை–மயிலாடுதுறை இடையேயும் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த ரயில்கள் விவரம்...

திருச்சி–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (வண்டி எண்:07676)

திருச்சியில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்கு புறப்பட்டு 3.15 மணிக்கு கும்பகோணத்திற்கும், மாலை 4.25 மணிக்கு மயிலாடுதுறைக்கும் சென்று சேரும். இந்த ரயில் திருவெறும்பூர், பூதலூர், தஞ்சை, திட்டை, பண்டாரவாடை, சுந்தரபெருமாள்கோவில், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

மயிலாடுதுறை–தஞ்சை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்(வண்டி எண்:07681)

மயிலாடுதுறையில் அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு கும்பகோணத்திற்கும், 6.30 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், சுந்தரபெருமாள்கோவில், பாபநாசம், பண்டாரவாடை, திட்டை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

கும்பகோணம்–மயிலாடுதுறை
தஞ்சை–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்(வண்டி எண்:07682)

தஞ்சையில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு 8.05 மணிக்கு கும்பகோணத்திற்கும், 9.15 மணிக்கு மயிலாடுதுறைக்கும் சென்று சேரும். இந்த ரயில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

மயிலாடுதுறை–தஞ்சை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்(வண்டி எண்:07685)

மயிலாடுதுறையில் இருந்த காலை 9.35 மணிக்கு புறப்பட்டு 10.25 மணிக்கு கும்பகோணத்திற்கும், 11.50 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரயில் அனைத்து ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

தஞ்சை–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்(வண்டி எண்:07686)

தஞ்சையில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு 1.25 மணிக்கு கும்பகோணத்திற்கும், 2.45 மணிக்கு மயிலாடுதுறைக்கும் சென்று சேரும். இந்த ரயில் பண்டாரவாடை, பாபநாசம், சுந்தரபெருமாள்கோவில், சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

மயிலாடுதுறை–தஞ்சை எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்:07689)

மயிலாடுதுறையில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு 4.15 மணிக்கு கும்பகோணத்திற்கும், மாலை 5.25 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரயில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

தஞ்சை–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்:07694)

தஞ்சையில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு 7.50 மணிக்கு கும்பகோணத்திற்கும், 8.50 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரயில் திட்டை, பசுபதிகோவில், அய்யம்பேட்டை, பண்டாரவாடை, பாபநாசம், சுந்தரபெருமாள்கோவில், சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம், ஆடுதுறை, நரசிங்கம்பேட்டை, குத்தாலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

மயிலாடுதுறை–தஞ்சை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்(வண்டி எண்:07695)

மயிலாடுதுறையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு 10.33 மணிக்கு கும்பகோணத்திற்கும், 11.20 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், சுந்தரபெருமாள்கோவில், பாபநாசம், பண்டாரவாடை, திட்டை ஆகிய இடங்களில் நின்று செல்லும். 2 நாட்களும் இதே நேரத்தில் தான் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் டெமு ரயில்களாகும். 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

24-ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள்!

திருச்சி–மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில்(வண்டி எண்:56824),  மயிலாடுதுறை–திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்(56821), திருச்சி–மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில்(56812), மயிலாடுதுறை–திருச்சி பாசஞ்சர் ரயில்(56811), திருநெல்வேலி–மயிலாடுதுறை பாசஞ்சர்ரயில்(வண்டி எண்:56822), மயிலாடுதுறை–திருச்சி பாசஞ்சர் ரயில்(வண்டி எண்:56823), திருச்சி–தஞ்சை பாசஞ்சர் ரயில்(76820), தஞ்சை–திருச்சி பாசஞ்சர் ரயில்(வண்டி எண்:76821), திருச்சி–தஞ்சை பாசஞ்சர் ரயில்(76822), தஞ்சை–மயிலாடுதுறை பாசஞ்சர்ரயில்(வண்டி எண்:76826), மயிலாடுதுறை–தஞ்சை பாசஞ்சர் ரயில்(வண்டி எண்:76825), தஞ்சை–திருச்சி பாசஞ்சர் ரயில்(76829) ஆகிய ரயில்களில் வருகிற 24–ந்தேதி வரை கூடுதலாக 4 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், ஒரு சரக்கு பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும்.