Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடங்கியது கும்பகோணத்தில் தீர்த்தவாரி..!

        மகாமகத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரிக்காக, கும்பகோணத்தில் இருக்கும் 12 சைவ கோயில்களிலிருந்தும் புறப்பட்ட, திருக்கோயிலின் உற்சவர்கள் மகாமகக் குளத்தில் இறங்கினர். வடமேற்கு கரையில் ஆதி கும்பேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அதே பகுதியில் காசி விஸ்வநாதர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர் ஆகியோருக்கும் தீர்த்தவாரி நடந்தது. கிழக்கு கரையில் பாணபுரீஸ்வரர் மற்றும் அபிமுகேஸ்வரருக்கும், மேற்கு கரையில் காளஹஸ்தீஸ்வரர், கோடீஸ்வரருக்கும், தெற்கு கரையில் அமிர்தகலசநாதர், கவுதமேஸ்வரருக்கும் தீர்த்தவாரி நடந்தது.

           அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகளின் மகாமக தீர்த்தவாரி நடைபெற்றது. அதேநேரம் காவிரி ஆற்றில் உள்ள சக்கர படித்துறையில் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, ராஜகோபாலசாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகியோருக்கு தீர்த்தவாரி நடந்தது. ஆதிகும்பேஸ்வரர் மகாமக குளத்தில் இறங்கியதும் அவரது தீர்த்தவாரி நிகழ்ச்சி பச்சைக்கொடி அசைத்து பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மற்ற சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு மகாமகக்குளத்திலும், சக்கரப்படித்துறையிலும் தீர்த்தவாரி நிகழ்ச்சி அமோகமாக நடைபெற்றுவருகிறது.   இதில் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து பங்கேற்றவண்ணம் இருக்கின்றனர்.

 ம.மாரிமுத்து ,படம் - க.பாலாஜி
 
மகாமக தீர்த்தவாரி வீடியோவினைக்காண கீழேயுள்ள லிங்கினை கிளிக்கவும் ;
https://www.facebook.com/SakthiVikatan/videos/814196912018673/

வீடியோ : க.சதீஷ்குமார்