Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பித்ருகளுக்கு சிராத்தம் செய்யும்போது 'பத்து நாள்

பித்ருகளுக்கு சிராத்தம் செய்யும்போது 'பத்து நாள் தாயாதி' ஒருவர் காலமான செய்தி போனில் வருகிறது. அப்போது சிராத்தத்தை நிறுத்திவிட வேண்டுமா?

- தேதியூர் பாலு, சென்னை-11

சிராத்தம் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் போது, தொலைபேசியில் சேதி வந்தால் சிராத்தம் முடியும் வரை தீட்டு இல்லை. சிராத்தத்தைத் தொடரலாம். ஆரம்பிக்கும் முன்பு சேதி வந்தால், சிராத்தத்தைத் தள்ளிப்போட வேண்டும்.

சிராத்தத்தில் ஈடுபடுபவன் தொலைபேசியை ஏற்பது தவறு. அது சிராத்தத்துக்கு இடையூறு செய்ததாக ஆகும். தொலைபேசித் தகவலை சிராத்தம் செய்பவனிடம் சொல்லுவதும் இடையூறை ஏற்படுத்தியதாக ஆகும். ஆக, இடையூறை ஏற்படுத்தி கேள்வி கேட்பது தவறு.

தொலைபேசித் தகவல் சிராத்தத்தைக் கெடுக்கவில்லை. இந்த செயல்பாடுதான் சிராத்தத்தின் தரத்தை தாழ்த்துகிறது. எப்போதும் கைபேசியோடு இருக்கப் பழகிவிட்டோம். கைபேசித் தகவலுக்கு முன்னுரிமை கொடுக்கும்போது, சிராத்தத்தின் மதிப்பு சரிந்துதான் இருக்கும். துணிந்த பிறகு கவலைப்படக் கூடாது.