Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கும்பாபிஷேகத்துக்கும் கருடனுக்கும் அப்படி என்ன தொடர்பு?

கும்பாபிஷேகத்தின் போது கோயிலுக்கு மேலே கருடன் பறப்பதை பார்த்திருக்கிறேன். கும்பாபிஷேகத்துக்கும் கருடனுக்கும் அப்படி என்ன தொடர்பு?

- மீனா ரெங்கனாதன், சென்னை-33
 

கும்பாபிஷேகத்துக்கும் கருடனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விண்வெளியில் கருடனைப் பார்ப்பது சுப சகுனம். கும்பாபிஷேகம் முறைப்படி நடந்தேறியதாக சுட்டிக் காட்டும் அது. அதனால் மனம் திருப்தி அடையும்.

சகுனம் என்ற சொல்லுக்கு பறவை என்று பொருள் உண்டு. பறவையைப் பார்ப்பது நல்ல சகுனம். வீட்டிலிருந்து வெளியே கிளம்பிய உடன், விண்வெளியில் கருடனைப் பார்த்தால் நினைத்த காரியம் ஈடேறும் என்பதற்கு அறிகுறி. ஈடுபட்ட அத்தனை செயல்களிலும் வெற்றி கண்டவர் கருடாழ்வார். அவரைக் கண்ணுற்ற வேளையில் நம் மனம் 'வெற்றி உண்டு' - என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். கும்பாபிஷேக வேளையில் அவரது தோற்றம், அபிஷேகம் இனிதே முடிந்ததாக நினைக்கச் செய்யும்.

(சக்தி விகடனில் இருந்து)