Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜயோகம் தேடி வரும்!

ப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தரும் நீங்கள் பிறருக்கு உதவும் நல்லெண்ணம் கொண்டவர்கள்; முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள். அதோடு, சாதனையின் நாயகனாகத் திகழ்வீர்கள். ராமாயண நாயகன் ஸ்ரீராமபிரான், நாடே புகழ்ந்து போற்றும் ஸ்ரீஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பிறந்தது இந்த லக்னத்தில்தான்!

 

உங்களின் பிற குணங்கள்:

* சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவரான நீங்கள் வார்த்தை ஜாலம் கொண்டவர்கள். பேச்சில் எவரையும் வெல்பவர்கள். தீர்க்காயுள் உண்டு. ஆரம்ப காலம் சுமாராகவும், 40 வயதுக்குப் பிறகு மகாஜனயோகம், கோடீஸ்வரராகும் யோகம் ஸித்திக்கும்.

* எப்போதும் தெய்வ அனுக்கிரகம் உடன் வரும். அன்புக்கு மட்டுமே அடிபணிவீர்கள். அதிகாரம் என்பதே கூடாது என்பீர்கள். நண்பர்கள் அதிகம் உண்டு. தெய்வீக வழிபாடுகளில் அதிக ஈடுபாடு இருக்கும்.

* தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். கல்வியிலும் திறமைசாலிகள்தான். கற்பனைத் திறன் அதிகம் உண்டு. நீதி, நேர்மை, உண்மையில் நம்பிக்கை கொண்டவர் நீங்கள். பண விஷயங்களில் கண்டிப்பானவர்.

லக்னாதிபதி: சந்திரன்

தெய்வம்: முருகன்

அதிதேவதை: பார்வதி

வஸ்திரம்: வெண்மை

அதிர்ஷ்ட எண்கள்: முக்கியமாக 2, 11, 20. மற்றும் 9, 18, 27 ஆகிய எண்களும் நலம் பயக்கும்.

வழிபாடு: திங்கட்கிழமைதோறும் சிவாலயம் சென்று தரிசிப்பதும், சிவபுராணத்தை பக்தியுடன் பாராயணம் செய்வதும் நல்லது. அப்படிச் செய்து வந்தால், மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்கி சந்தோஷமான வாழ்வுக்கு வழி பிறக்கும்.

பொதுப் பலன்: மூன்றாம் பிறை தரிசனம் வாழ்வில் முன்னேற்றம் தரும். திருப்பதி திருமலையப்பன் தரிசனமும் நல்லது.

லக்ன குறிப்பு:

பொதுவாக, சூரியன் ஒரு நாளில் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 12 லக்னங்களுக்கு மாறுவார். ஜாதகத்தின் ராசிக் கட்டத்தில் 'ல’ என்ற குறிப்பை வைத்து உங்கள் லக்னத்தை நீங்களே அறியலாம்.