Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜயோகம் தேடி வரும் - லக்கி லக்னம் சிம்மம்

உங்கள் லக்னம் லக்கியா?

“ஜோதிடமணி” வசந்தா சுரேஷ்குமார்
 
தோல்வி கண்டு துவளாமல், வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று செயல்பட்டு வாழ்வில் ஜெயிப்பவர் நீங்கள். எடுத்த காரியங்கள் எதிலும் தடைகள் ஏற்படாது.

உங்களின் பிற இயல்புகள்:

சூரியனின் ஆதிக்கத்தில் மிகவும் பிரகாசமாக வலம் வரும் யோகம் கொண்டவர் நீங்கள். எப்போதும் ஒரு கொள்கையுடன் செயலாற்றுவீர்கள்.

தனவரவு சரளமாக வந்துசேரும் பாக்கியம் உண்டு. உடன்பிறந்தோரிடம் பிரியம் அதிகம். சுய உழைப்பால் வாழ்வில் உயர்வு காண்பீர்கள். தலைமைப் பதவி தேடிவரும். அதிகாரத் தோரணை அதிகம் உண்டு உங்களிடம்.

நண்பர்கள் மத்தியில் போற்றப்படுவீர்கள். பிறரது வளர்ச்சி கண்டு சந்தோஷப்படும் அன்பர் நீங்கள். ஆலய வழிபாடுகளில் ஆர்வம் உண்டு. பட்டங்கள், பதவிகள், பரிசுகள் வாங்கிக் குவிப்பீர்கள்.

போஜனப்பிரியர்கள். அவ்வப்போது முன்கோபம் வரும். மிகவும் கண்டிப்பானவர்களும்கூட!

விருந்து, கேளிக்கைகள் என சுப நிகழ்வுகளில் அடிக்கடி கலந்துகொள்வீர்கள். குடும்பத்தாரின் அன்பைப் பெறுவீர்கள். எப்போதும் ஆள், அதிகாரம், தொண்டர்கள் உங்களுக்கு உண்டு. மற்றவர் செய்யும்  குற்றங்களை எளிதில் கண்டுபிடிப்பதில் மகா கெட்டிக்காரர்கள் நீங்கள்.

லக்னாதிபதி: சூரியன்

தெய்வம்: ஸ்ரீபார்வதிதேவி

தேவதை: ஸ்ரீசிவபெருமான்

வஸ்திரம்: சிவப்பு நிற ஆடைகள்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19 மேலும் 9, 18, 27.

வழிபாடு: பிரதி ஞாயிற்றுக்கிழமைதோறும் சூரிய வழிபாடும் நவக்கிரக துதிகள் பாராயணமும் செய்வது நலம் சேர்க்கும். அத்துடன், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு தானம் அளிப்பதும் சிறப்பு. அதன் பலனாக வாழ்வில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். இயன்றால் ஒருமுறை சென்னை- மயிலாப்பூரில் கோயில் கொண்டருளும் அருள்மிகு கபாலீஸ்வரர்- கற்பகாம்பாளைத் தரிசித்து வாருங்கள்.

உங்கள் லக்னத்தை அறிவது எப்படி?

பொதுவாக, சூரியன் ஒருநாளில் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 12 லக்னங்களுக்கு மாறுவார். ஜாதகத்தின் ராசிக் கட்டத்தில் 'ல’ என்ற குறிப்பை வைத்து உங்கள் லக்னத்தை நீங்களே அறியலாம்.

(நன்றி : சக்தி விகடன்)