Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜயோகம் தேடி வரும் - துலாம்

உங்கள் லக்னம் லக்கியா?

'ஜோதிடமணி’ வசந்தா சுரேஷ்குமார்
 லக்கி லக்னம் துலாம்

நேர்மை, கண்டிப்பு, உண்மை என வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர் நீங்கள். பிறருக்கு ஓடி வந்து உதவும் உன்னத குணமும் உண்டு. எடுத்த செயலை முடிக்கும் வரையில் போராடி வெற்றி காணும் கடும் உழைப்பாளி நீங்கள்.

உங்களின் பிற குணங்கள்:

வாழ்க்கையில் போராட்டமும், வெற்றியும், சாதனையும் என உயர்ந்து நிற்பீர்கள். பிறரின் பொறாமைப் பார்வைக்கு ஆளாவீர்கள். நண்பர்கள் அதிகம் உண்டு. எந்நேரமும் வேலை செய்யத் தயங்காதவர் நீங்கள்.

சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் நல்ல குணம், நல்ல புத்தி, அறிவு, புகழ், சம்பத்து இவைகளுடன் கலையார்வம் அதிகம் பெற்றவராகத் திகழ்வீர்கள். பெருமையுடன் வெற்றி மாலை சூடுவீர்கள். சனி, புதன், சுபர்கள். சந்திரன், புதன் யோககாரகன். சூரியன், குரு பாபர்கள்.

விருந்து விழாக்களில் கலந்துகொள்வதும், தலைமை தாங்குவதும் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். வாசனைத் திரவியங்களில் மனத்தைப் பறிகொடுப்பீர்கள். நகைச்சுவையாய் பேசுவதும் சிரிக்க வைப்பதும் உங்களுக்குக் கைவந்த கலை.

கற்பனை வளமும், ஓவியத் திறமையும், விளையாட்டுத் துறையில் ஆர்வமும் கொண்ட நீங்கள் பக்தி மார்க்கத்திலும் சிறந்து விளங்குவீர்கள். ஆடை, ஆபரணங்களில் ஆர்வம் உண்டு.

சொத்துக்கள் சேர்ப்பதில் கெட்டிக்காரரான நீங்கள், பண விஷயத்தில் எப்போதும் கறாராக இருப்பீர்கள்.

லக்னாதிபதி: சுக்கிரன்

தெய்வம்:  லட்சுமி

அதிதேவதை: விஸ்வகர்மா, வாயு, குமரன்,

வஸ்திரம்: வெண்பட்டு

நவரத்தினம்: வைரம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24, 33

வழிபாடு: வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் (10.30 மணி முதல் 12 வரை) ஸ்ரீகருமாரியம்மன் அல்லது துர்கை அம்மனை வழிபாடு செய்துவர, துன்பம் விலகி இன்பம் பெருகும்.
''காத்யாயனாய வித்மஹே கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கா ப்ரோசதயாத்''

- இந்த ஸ்லோகத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்வதும் நல்லது.