Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜயோகம் தேடி வரும் - விருச்சிகம்

உங்கள் லக்னம் லக்கியா?
லக்கி லக்னம் விருச்சிகம்
ஜோதிடமணி வசந்தா சுரேஷ்குமார்

பிறருக்கு உதவும் குணம் கொண்டவர் நீங்கள். உத்தம நெறியாளராகவும், எதையும் எதிர்கொள்ளும் பண்பாளராகவும் வலம் வரும் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவீர்கள்.

உங்களின் பிற குணங்கள்:

ஆசாரசீலமும், அன்புக்கு மட்டுமே தலைவணங்கும் குணமும் கொண்ட நீங்கள் அதிகாரத்துக்குக்  கட்டுப்படாதவர்களாக இருப்பீர்கள்.

 சுய திறமையால் வாழ்வில் உயர்வான நிலையை அடைபவர் நீங்கள். உன்னதமான சாதனைக்குச் சொந்தக்காரராகத் திகழும் உங்களுக்கு சூரியன், குரு, சந்திரன் ஆகியோர் சுபர்கள்.

 செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் உறவினர்களிடம் அதிகம் அன்பு காட்டுவீர்கள். தாராள மனம் கொண்ட உங்களின் பரோபகாரத்தால் பெருமையும் புகழும் உங்களைத் தேடி வரும்.

 தெய்வ வழிபாடுகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கடவுளை கனவில் தரிசிப்பதும் நடக்கும். கனவுகள் பலிதம் ஆகும் ஜாதகம் உங்களுடையது. சூரியன், சந்திரன் யோகம் தருவார்கள்.

கல்வியில் புலமையும், நல்ல தேர்ச்சியும் பெறுவீர்கள். உங்களின் பேச்சில் நேர்மை நிறைந்திருக்கும். சொல்வாக்கால் பெரும் செல்வாக்கை இறையருளால் எட்டிப்பிடிப்பீர்கள். பெரும்புகழும் பெருமையும் அடைவீர்கள்.

லக்னாதிபதி: செவ்வாய்

தெய்வம்: ஸ்ரீசுப்ரமணியர்

அதிதேவதை: லட்சுமி

வஸ்திரம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 2, 20, 11.

வழிபாடு: ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் ஸ்ரீஷண்முகர் தரிசனமும், ஸ்ரீகந்தர் சஷ்டிகவசம், ஸ்ரீஷண்முக கவச பாராயணமும் செய்துவர... கவலைகள் நீங்கி, சந்தோஷம் கூடும். பரணி, விசாகம், சஷ்டி, கிருத்திகை நாட்களில் ஸ்ரீசுப்ரமணியரை தரிசனம் செய்துவர, சகல சுபிட்சங்களும் கைகூடப் பெறலாம்.

அத்துடன் கீழ்க்காணும் ஸ்ரீமுருகப்பெருமான் காயத்ரி மந்திரத்தை அனுதினமும் சொல்லி, முருகக்கடவுளுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட, அல்லல்கள் யாவும் நீங்கும்; ஆனந்தம் பெருகும்.

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்: