Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆரூடம் அறிவோம்:14

ஜோதிட புராணம்

- சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

##~##

முந்தைய அத்தியாயங்களில் நவக்கிரகங்களின் காரகத்துவம் பற்றியும், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் நன்மை- தீமைகளைப் பற்றியும் அறிந்தோம். ஆரம்பப் பள்ளியில் கணிதம் பயிலும் மாணவ- மாணவியர் எவ்வாறு பெருக்கல் வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்து கொள்கிறார்களோ, அதுபோன்று ஜோதிடம் கற்கும் மாணவர்களும், ஜோதிட சாஸ்திரம் தெரிந்து கொண்டவர்களும் நவக்கிரகங் களின் காரகத்துவம் பற்றியும், பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் மனப்பாடமாகத் தெரிந்துகொள்வது அவசியம்.

நவக்கிரகங்களுக்கு உரிய பல்வேறு பெயர்கள், கிரகங்களின் நட்சத்திரம், கோத்திரம், கிரக மூர்த்திகளின் தேவியர் பெயர், அவர்களுக்கு உரிய அதிதேவதை, வாகனம் ஆகியவை குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். கிரஹங்களின் கோணம், வடிவம், அவர்கள் அமர்ந்திருக்கும் திசைகள், ராசிகளில் சஞ்சரிக்கும் காலம், அவர்களுக்கு உரிய நிறம், வஸ்திரம், உலோகங்கள், ரத்தினங்கள் ஆகியவை குறித்தும் அறிவது அவசியம். அதேபோன்று ஓவ்வொரு கிரகத்துக்கும் உரிய தானியம், சமித்துகள், சுவை, நைவேத்தியம் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

 கீழுள்ள படத்தை க்ளிக் செய்யவும்

ஜாதகம் பார்த்துப் பலன் சொல்லும்போது, எந்த கிரகத்துக்காக எந்த தேவதையை வழிபட வேண்டும், என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல இந்த விவரங்கள் தேவை.

அவற்றை ஓர் அட்டவணையாகவே இங்கே காணலாம். இது உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.

 

புண்ணிய பாரதத்தில் நவக்கிரகங்களுக்கு உரிய புண்ணிய க்ஷேத்திரங்கள், அவற்றின் மகிமை, நவக்கிரக தோஷ பரிகாரங்கள், அந்தந்த கிரகங்களுக்குரிய காயத்ரீ மந்திரங்கள் ஆகியவை பற்றிய விவரங்களைத் தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

- தொடரும்...