Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீசரஸ்வதிதேவி - சாத்தூர்

 
கல்வி ஞானம் அருள்வாய்... சரணம்!
ஸ்ரீசரஸ்வதிதேவி - சாத்தூர்

தென் தமிழகமாம் சாத்தூரில், அழகுற கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீபத்ரகாளியம்மன். சாந்நித்தியம் கொண்ட தெய்வம் என்று பக்தர்கள் யாவரும் போற்றும் இந்த அம்பிகையின் ஆலயத்தில், மற்றொரு தேவியும் அருள்பாலிக்கிறாள்.

ஆம்! செல்வமும் வீரமும் வழங்கும் ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் தனிச் சந்நிதியில், அமர்ந்த திருக்கோலத்தில்... கல்வி- ஞானத்தை வாரி வாரி வழங்கு கிறாள் ஸ்ரீசரஸ்வதிதேவி!

 

இங்கே... பத்ரகாளியம்மனுக்கு இணையாக கல்விக்கடவுளாம் ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகள், அபிஷேக - ஆராதனைகள் நடைபெறுகின்றன. அத்துடன் மாணவர்கள் கல்வி-கேள்வியில் சிறந்து விளங்க, வருடந்தோறும் சிறப்பு பூஜை மற்றும் ஹோமங்களும் நடைபெறுகின்றன. இதில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய ஊர்களில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்து பங்கேற்று, சரஸ்வதிதேவியின் அருட்கடாட்சத்துடன் திரும்பிச் செல்வதாகச் சொல்கின்றனர் பக்தர்கள்.

'ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
சித்திர் பவது மேஸதா' - என்று

ஸ்ரீசரஸ்வதிதேவி குறித்த ஸ்லோகத்தை 108 முறை எழுதி, சரஸ்வதிதேவியிடம் சமர்ப்பித்து பிரார்த்திக்கின்றனர். இன்னும் சிலர், சந்நிதிக்கு எதிரே அமர்ந்து, இந்த ஸ்லோகத்தை கண்மூடி உச்சரித்து வழிபடுகின்றனர். இதனால், வீண் பயம் விலகும்; தன்னம்பிக்கை பிறக்கும்; தேர்வில் வெற்றி பெறுவது எளிது; உறுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை!

- இர. ப்ரீத்தி
படங்கள் என்.ஜி. மணிகண்டன்