Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீஹயக்ரீவர் - நாகிசெட்டிபட்டி (சேலம்)

 
கல்வி ஞானம் அருள்வாய்... சரணம்!
ஸ்ரீஹயக்ரீவர் - நாகிசெட்டிபட்டி (சேலம்)

டைப்புக்கு ஆதாரமான வேதங்களை பிரம்மதேவனிடம் இருந்து அசுரர்கள் அபகரித்துச் செல்ல, படைப்புத் தொழில் தடைப்பட்டது. அண்டசராசரங்களையும் இருள் சூழ்ந்தது. ரிஷிகளும் தேவர்களும் ஸ்ரீமகாவிஷ்ணுவைப் பிரார்த்திக்க, அவர் பரிமுகனாய்- ஸ்ரீஹயக்ரீவராக சென்று அசுரரை அழித்து வேதங்களை மீட்டு வந்தார்.

 

வேதம் மீட்டுத் தந்த ஸ்ரீஹயக்ரீவரை, ஞானக்கடவுளாக போற்றும் புராணங்கள், 'இவரே, கலைமகளாம் ஸ்ரீசரஸ்வதிதேவியின் குரு' என்றும் விவரிக்கின்றன. கல்வி- கேள்விகளில் சிறக்கவும், கலைகளில் ஞானம் பெறவும் இவரை வழிபட வேண்டும். செட்டிப்புண்ணியம், திருவஹீந்திரபுரம் போன்ற தலங்களில் தனிக் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். இன்னும் பல வைணவத் தலங்களில் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது, நாகிசெட்டிபட்டி- ஸ்ரீலட்சுமிநரசிம்மர் ஆலயம்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்துக்கு உட்பட்ட ஊர் நாகிசெட்டிபட்டி. சேலத்தில் இருந்து மேற்கே சுமார் 41 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். இங்குள்ள ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி ஆலயத்தில், தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீஹயக்ரீவர், வரப்பிரசாதியானவர். ஒவ்வொரு வருடமும் பள்ளித் துவக்க நாளன்று, ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதுடன், மாணவர்களுக்கு பேனாக்கள் வழங்கப்படுமாம். மாணவர்கள், புது உற்சாகத்துடன் படிக்கவும் தேர்வு எழுதவும் 'ஹரி ஓம் தத் ஸத்' எனும் மந்திரம் சொல்லி வழிபடுகின்றனர்.

பயபக்தியுடன் இந்த மந்திரத்தை உச்சரித்து, ஸ்ரீஹயக்ரீவரை தியானித்து வழிபட்டுவிட்டு தேர்வு எழுதச் சென்றால் வெற்றி நிச்சயம்!

- வே. கிருஷ்ணவேணி
படங்கள் க. தனசேகரன்