Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அருள்மிகு எழுத்தறிநாதர் - திருஇன்னம்பூர்

 
கல்வி ஞானம் அருள்வாய்... சரணம்!
அருள்மிகு எழுத்தறிநாதர் - திருஇன்னம்பூர்

'என் கணக்கு வழக்கில் மன்னருக்கு சந்தேகமா? என் சிவனே... என்ன இது சோதனை?' என்று கண்கலங்கி வேண்டி நின்றார் சுதன்மன்.

பக்தன் பதறுவதை பகவான் பொறுப்பாரா?

கோயிலின் வரவு- செலவு கணக்கு மொத்தத்தையும் எடுத்துக்கொண்டு, மன்னரிடம் சென்று அருமையாக விளக்கம் கொடுத்தார் இறைவன். அதுவும் எப்படி? கணக்கன் சுதன்மனின் உருவத்திலேயே சென்று, மன்னனின் சந்தேகம் தீர்த்தாராம். தொடர்ந்து, கணக்கருக்கு மட்டுமின்றி மன்னருக்கும் திருக்காட்சி தந்தாராம் சிவனார்!

 

கும்பகோணம்- சுவாமிமலை சாலையில், புளியஞ்சேரி எனும் ஊருக்கு வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருஇன்னம்பூர் திருத்தலம். கணக்கருக்காக, தானே கணக்கு ஏடுகளைச் சுமந்து சென்று மன்னனின் சந்தேகம் தீர்த்ததுடன், தரிசனமும் தந்தருளிய சிவனார், கோயில் கொண்டிருப்பது இங்குதான். இவரின் திருநாமம் - ஸ்ரீஅட்சரபுரீஸ்வரர். அதாவது எழுத்தறிநாதர்! அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை.

'எழுதுங்கீழ் கணக்கு இன்னம்பர் ஈசன்' என அப்பர் பாடிப் பரவிய, சிறப்பு வாய்ந்த திருத்தலம் இது! இங்கு வந்து தவம் செய்து பிரார்த்தித்த அகத்தியருக்கு, தமிழ் இலக்கணத்தை போதித்தாராம் ஈசன். எழுத்தறிநாதர் என்ற திருப்பெயருக்கு, இதையும் காரணமாகச் சொல்வர்.

ஆக... கணக்கு வழக்கில் பேருதவி செய்த இன்னம்பூர் இறைவனை, அகத்தியருக்கு இலக்கணம் போதித்த எழுத்தறிநாதரை... வில்வம் சார்த்தி, இவரது சந்நிதியில் நோட்டுப் புத்தகம் மற்றும் பேனாவை வைத்து வழிபட, படித்ததெல்லாம் மனதில் பதியும்; தேர்வில் மிக எளிதாக வெற்றி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக, கணிதப் பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற இந்த சிவனாரை வழிபடுவது சிறப்பு!

- க. அமிர்தகணேசன்
படங்கள் சு. தமிழ்குமரன்