Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜய வருட இலவச ராசிபலன்கள்

 ஜய வருஷம் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

14-4-2014 முதல் 13-4-2015 வரை

தமிழ் வருடங்கள் 60 ஆகும். பிரபவ முதல் அக்ஷய வரை. இந்த வரிசையில் ஜய 28-ஆவது வருடம் ஆகும். திருக் கணிதப்படி 14-4-2014, திங்கள் கிழமை, வளர்பிறை சதுர்த்தசி, ஹஸ்த நட்சத்திரம், சித்தயோகம், வ்யாகாத யோகம், பத்திரை கரணம், காலை 7.35 மணிக்குத் தமிழ்ப் புத்தாண்டு ஜய வருடம் பிறக்கிறது.

ஜய வருடதன்னிலே செய் புவனங்கள் எல்லாம்
வியனுரவே பைங்கூழ் விளையும் நயமுடனே
அக்கம் பெரிதாமளவில் சுகம் பெருகும்
வெக்குவார் மன்னரிறை மேல்.

மலைகள், காடுகள்,பூஞ்சோலைகள் செழித்து, பூமி சிறந்து விளங்கும். எங்கும் இனிய சங்கீதம் நடைபெறும். சுகம் பெருகும். அரசர்கள் போரில் வெற்றியை எதிர்பார்ப்பர்.

இந்த வருஷத்துக்கு ராஜா சந்திரன். மந்திரியும் சந்திரன் ஆவார். அதிக மழை பொழியும். விளைச்சல் பெருகும். சுகம் கூடும்.

ஜய என்றாலே வெற்றி. இந்த ஆண்டு எல்லோருக்கும் அவரவர் தகுதிக்குரிய வகையில் வெற்றியைத் தரும். கோசாரப்படி மத்திய அரசில் புதிய மாற்றம் உண்டாகும். இரும்பு, செம்பு, தங்கம் விலை ஏறும். அரசாங்கத்துக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வரிகள் சுலபமாக வசூலாகும். அரசியல் கட்சிகளில் பழைமையான கட்சிக்கு செல்வாக்கு பெருகும். சந்திரன் பெண் கிரகமாகி, இந்த வருஷத்துக்கு ராஜாவாகவும் மந்திரியாகவும் வருவதால் பெண்களுக்கு மதிப்பு உயரும். அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். நாடாளும் தகுதியும் உண்டாகும். திருக்கோயில்களின் வளர்ச்சிக்கு அரசாங்கம் பொருளாதார உதவி வழங்கும்.

பொதுவாக இந்த ஆண்டு ஆதாயம் அதிகமாகி, விரயம் குறையும். சேமிப்பு அதிகமாகும்.

சூரியன் கேதுவுடன் இணைந்திருப்பதால் பக்தி மார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும் உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். துலாத்தில் சனி, ராகு இருப்பதால் வான் வழிப் பயணம் பாதிக்கும். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், காற்று ஆகாயம் சம்பந்தமான இனங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் சங்கடங்கள் ஏற்படும்.

செவ்வாய் கன்னியில் இருப்பதால் கட்டடப் பொருட்கள் விலை குறையும். இன் ஜினீயரிங் துறையினருக்கு வருவாய் கூடும். பாதுகாப்புத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சம்பந்தமான இனங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் இனங்கள் லாபம் தரும்.

வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும். படித்த இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும். வனத்துறையினருக்கு நற்காலம் உதயமாகும்.

ஒப்பந்த முறைப்படி தொழில் புரிபவர்களுக்கு லாபம் குறைவதுடன், நற்பெயரும் பாதிக்கும்.

சுக்கிரன் கும்பத்தில் இருப்பதால் சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகள் அபிவிருத்தி அடையும்.

அழகுப் பொருட்கள் லாபம் தரும். பெண்களுக்குச் சாதகமான சட்டங்கள் உருவாகும்.

சுரங்கத்தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் காரியங்களில் குறுக்கீடுகளும்தடைகளும் உண்டாகும். வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படும்.

ஜூன் 19 முதல் குரு கடக ராசிக்கு மாறுவதால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் அபிவிருத்தி உண்டாகும். வங்கிகள், சேமிப்பு நிறுவனங்கள், கஜானாக்கள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

கடல் வாணிபம் மூலம் லாபம் அதிகமாகும்.

நவம்பர் 2-ஆம் தேதி முதல் சனி விருச்சிக ராசிக்கு மாறுவதால் ஜலத்தால் சேதம் உண்டாகும். அந்நியர்களால் தொல்லைகள் ஏற்படும். தொழிலாளர்களுக்கு சங்கடங்கள் சூழும். ஜல சம்பந்தமான நோய்கள் பரவும்.

தெய்வ காரியங்களிலும் அறப்பணிகளிலும் ஈடுபடுவதன் மூலம் நலம் கூடும் சங்கடங்கள் நிச்சயமாக குறையும் கூட்டுப் பிரார்த்தனை செய்வது விசேடமாகும். ஹோமங்கள் செய்வதன் மூலமும் அறப்பணிகளில் ஈடுபடுவதன் மூலமும் அனைவருக்கும் நன்மைகள் உண்டாகும்.


இனி பன்னிரண்டு ராசிகளுக்கும் உரிய ஜய வருடப் பொதுப் பலன்களைப் பார்ப்போம்.

உங்கள் பிரத்யேக இலவச பலன்களை அறிய இங்கே க்ளிக் செய்க