Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீகருப்பண்ணசாமி - சப்பரத்தடி (மதுரை)

 
கல்வி ஞானம் அருள்வாய்... சரணம்!
ஸ்ரீகருப்பண்ணசாமி - சப்பரத்தடி (மதுரை)

வெள்ளையர் ஆட்சிக் காலம்! மதுரை கலெக்டராக இருந்த துரை ஒருவர், குதிரையில் வந்தபோது, எதிரில், சப்பரத்தடி கருப்பண்ண

சாமி கோயிலின் பூசாரியும் குதிரையில் வர, 'எனக்குச் சமமாக குதிரையில் வருகிறானே' என்று கோபமானார். விளைவு... பூசாரிக்கு ஆயிரம் சவுக்கடிகள்! ஓடி வந்து கருப்பண்ணசாமியிடம் முறையிட்டார் பூசாரி. மறுநாள்... வெள்ளைக்கார துரையின் மனைவிக்கு உடல் முழுவதும் திடீரென எரிச்சல் பரவியது. அவள், கர்ப்பிணி வேறு. துடித்தாள்! எரிச்சல், எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை. பிறகு, 'கருப்பண்ணசாமியின் கோபம் இது' என உணர்ந்த துரை, ஓடிப்போய் கருப்பண்ணசாமியிடம் வேண்டினார். அவருடைய மனைவியும் குணமானாள். இத்தனை உக்கிரமானவர் கருப்பண்ணசாமி. ஆனால், இப்போது சாந்த சொரூபராக அருள்பாலிக்கிறார்.

மதுரை- தல்லாகுளத்தில், தமுக்கம் மைதானம் எதிரே உள்ளது சப்பரத்தடி கருப்பண்ணசாமி கோயில். அழகர்கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்புதானாம் இவர்! கள்ளழகரும் தல்லா குளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசபெருமாளும் விழாக் காலங்களில் இவரின் சந்நிதிக்கு வந்து செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் கருப்பு கோயிலில், மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்குமாம்!

'தேர்வுக் காலத்தில், உடலில் நோய், வீண் பயம், டென்ஷன், தீய சக்தி ஏதும் அண்டாதபடி காவல் இருப்பாராம் கருப்பண்ணசாமி. உடலும் மனமும் உறுதியானால் நன்றாகப் படிக்கலாம்; படித்தது நினைவில் பதியும்; தேர்வில் வெற்றி பெறலாம்' என்கின்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள், சந்தனக் காப்பு அலங்காரம் செய்தும் பொங்கலிட்டும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

- இரா. கோகுல் ரமணன்
படங்கள் ஈ.ஜெ. நந்தகுமார்