Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்!

மதுரை: பச்சைப் பட்டு உடுத்தி இன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.

அழகர் கோவிலிலிருந்து புறப்படும் கள்ளழகர், தன் தங்கை மீனாட்சி அம்மனின் திருமணத்தைக் காணக் கிளம்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் வருவதற்கு முன்பே மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்ததால் கள்ளழகர் கோபமடைந்ததாகவும், பின்னர் ஆற்றில் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்வதைக் குறிக்கும் விதமாகவே இந்த விழா நடைபெறுகிறது.

இது மட்டுமின்றி, திருமலை நாயக்கர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த விழா, சைவ-வைணவ சமயத்தினரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டதாகவும் மக்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது.

அதன்படி, மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். இந்த காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். இந்த விழாவால் மதுரை நகரமே மக்கள் வெள்ளத்தில் விழா கோலம் பூண்டிருந்தது.

இந்த விழாவையொட்டி, ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், கோபுரங்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டு அவற்றின் மூலமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.