Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபெயர்ச்சி பலன்கள்: ரிஷபம்

னைத்தையும் அறிந்தவர் நீங்கள். குரு 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 3-ல் அமர்வதால், எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். இளைய சகோதரர் வகையில் பிணக்குகள் வரும். சேமிப்பை கரைக்காதீர்கள். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்லாதீர்கள். தம்பதிக்குள் சச்சரவுகள் வந்தாலும் அன்பும், அந்நியோன்யமும் குறையாது.

முக்கிய விஷயங்களை நீங்களே முன்னின்று முடிக்கப் பாருங்கள். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். எவரையும் விமர்சிக்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றவேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும்.

குரு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால், மனைவி வழியில் உதவிகள் உண்டு. கூடாப்பழக்கம் விலகும். குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் பண வரவு உண்டு. தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். சிலருக்கு வேலை கிடைக்கும். குரு லாப வீட்டை பார்ப்பதால், மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.    

குரு பகவானின் சஞ்சாரம்...

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் அஷ்டம- லாபாதிபதியான குரு புனர்பூசத்தில் செல்வதால் வேலைச் சுமை, திடீர் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். மூத்த சகோதர வகையில் சச்சரவு வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். புது பதவிகளை யோசித்து ஏற்கவும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் பாக்யாதிபதியும்- ஜீவனாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆரோக்கியம் சீராகும். வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கு சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணம் கூடி வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள்.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் தன - பூர்வ புண்ணியாதிபதியான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கலகலப்பு கூடும். வி.ஐ.பி-கள் அறிமுகம் ஆவர். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.  3.12.14 முதல் 21.12.14 வரை குரு கேதுவின் மக நட்சத்திரத்தில் செல்வதால், அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள். தம்பதிக்குள் சச்சரவு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்ய நட்சத்திரத் திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், குழப்பம், பூர்வீகச் சொத்துப் பிரச்னை வந்து செல்லும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிந்து, அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். கட்டட உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோ- கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களில் ஒருவர் உங்களை ஆதரித்தாலும் மற்றொருவர் மூலம் குடைச்சல்கள் இருக்கும்.    

உத்தியோகத்தில் அதிக அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரிகளை விமர்சிக்காதீர்கள். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். சில தேர்வுகளில் வெற்றி பெற்று, அதன் மூலம் பதவி உயர்வு கிடைக்கும். என்றாலும் உங்களின் நிலையை தக்கவைக்க போராட வேண்டியது இருக்கும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். இடமாற்றம் சாதகமாகும்.    

கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டும். நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் அமருவார்கள். மாணவ- மாணவியர் விரும்பிய கல்விப்பிரிவில் சேருவார்கள்.

கலைத் துறையினரின் யதார்த்தப் படைப்புகளுக்கு பாராட்டுகள் குவியும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். கௌரவ பதவி உண்டு. சிலர் வழக்குகளைச் சந்திக்க நேரிடும். சகாக்களை அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சிறு சிறு தடைகளையும் தடுமாற்றங்களையும் தந்தாலும் இடையிடையே வெற்றியையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: பிரதோஷ திருநாளில் தென்குடித்திட்டை ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். ஏழை இதய நோயாளிகளுக்கு உதவுங்கள். முன்னேற்றம் உண்டு.