Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபெயர்ச்சி பலன்கள்: மிதுனம்

ன்னிக்கும் குணம் கொண்ட பண்பாளர் நீங்கள். குருபகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், மகிழ்ச்சி கூடும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேருவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து உறவாடுவர். நோய்கள் குணமாகும். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.  வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவரின் ஆரோக்கியமும் சீராகும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.  

குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்படும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகள் வாய்க்கும். நல்ல வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.      

குரு பகவானின் சஞ்சாரம்...

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் சப்தம- ஜீவனாதிபதியான குரு புனர்பூசத்தில் செல்வதால், வேலைச் சுமை, வீண் அலைச்சல், கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம், எதிலும் பற்றற்ற போக்கு, மனைவிக்கு மருத்துவச் செலவுகள், உத்தியோகத்தில் மறைமுக தொந்தர வுகள் வந்து போகும். வருமான வரி, சொத்து வரிகளை தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் அஷ்டம- பாக்கியாதிபதியான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், பணவரவு உண்டு. பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிநாதனும் - சுகாதிபதியுமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் பணவரவு உண்டு. கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். அறிவுப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். தாயாரின் உடல் நிலை சீராகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.

3.12.14 முதல் 21.12.14 வரை கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, வீண் பழி வந்துசெல்லும். எவருக்கும் சட்டத்துக்குப் புறம்பாக உதவ வேண்டாம்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...

22.12.14 முதல் 17.4.15 வரை குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தில் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எனினும் முன்கோபம், திடீர் பயணங்கள், கடன் பிரச்னைகள் வந்துசெல்லும். ஷேர் மூலம் பணம் வரும்.    

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்களால் உற்சாகம் அடைவீர்கள். சிலர், சொந்த இடத்துக்கு கடையை மாற்றி அழகுபடுத்துவார்கள். சிலர், மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபம் அடைவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் இணைவார்.

உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலைக்கு ஏற்ப செயல் படுவீர்கள். உங்களின் முக்கியத்துவம் கூடும். அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும்.  

கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, புது வேலையில் அமருவீர்கள். மாணவ- மாணவியரின் அலட்சியப் போக்கு மாறும். அரசியல்வாதிகளின் களப்பணி சிறப்பு சேர்க்கும். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு, படைப்புகள் தடைகள் நீங்கி வெளியாகி வெற்றிபெறும். வருமானம் உயரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, தொட்டதையெல்லாம் துலங்க வைத்து உங்களை உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்: பூரம், உத்திரட்டாதி நாள்களில் விழுப்புரம் அருகிலுள்ள பனையபுரம் ஸ்ரீபனங்காட்டீஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். துயரங்கள் நீங்கும்.