Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபெயர்ச்சி பலன்கள்: கன்னி

னவை நனவாக்கும் உழைப்பாளி நீங்கள்.  குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 11-ல் அமர்வதால், வெளிச்சத்துக்கு வருவீர்கள். எடுத்த வேலைகளில் வெற்றியையும், குடும்பப் பிரச்னைகளுக்கான நல்ல தீர்வுகளையும் லாப ஸ்தான குரு தந்தருள்வார்.பணப் புழக்கம் அதிகரிக்கும். கடனை அடைப்பீர்கள். வீடு கட்டும் பணி தடைகள் நீங்கி மீண்டும் துவங்கும். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமணம் கூடி வரும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

அரசு விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். ஷேர் மூலமாக பணம் வரும். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் மனஸ்தாபங்கள் விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் புகழ் கூடும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், மனத்தில் தெளிவு பிறக்கும். மழலை பாக்கியம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குரு, ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உற்சாகம் அடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பி-களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

குரு பகவானின் சஞ்சாரம்:

13.6.14 முதல் 28.6.14 வரை, உங்களின் சுக- சப்தமாதிபதியான குரு பகவான் தனது சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், தாயாருக்கு நெஞ்சு எரிச்சல், முதுகுத் தண்டில் வலி வந்து போகும். வாகனத்தை எடுக்குமுன் எரிபொருள், பிரேக் எல்லாவற்றையும் சரிபார்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.  

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் பூர்வ புண்யாதி பதியும்-சஷ்டமாதிபதியுமான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் விருப்பு வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப் படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் ராசியாதிபதியும்-ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.  புதிதாக சொத்து வாங்குவீர்கள். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 12-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், அலைச்சல், செலவுகள் இருக்கும். சிக்கனம் தேவை.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:

22.12.14 முதல் 17.4.15 வரை குருபகவான் ஆயில்ய நட்சத்திரத்திலும், 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேற்று மாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை அமையும். நகரின் எல்லைப் பகுதியில் வீடு வாங்குவீர்கள்.

வியாபாரத்தில், பற்று- வரவு உயரும். சந்தை நிலவரத்தை  அறிந்து, அதற்கேற்ப குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். முக்கிய பிரமுகர் களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபம் உண்டு. நல்லவர்கள் பங்குதாரராக வர வாய்ப்பு இருக்கிறது. சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங் களுக்கு முன்னிலை வகிப்பீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை, மறைமுக அவமானம் ஆகியவை விலகும். அலுவலக சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். பதவி- சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்தும் அழைப்பு வரும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கு தள்ளுபடியாகும்.

கன்னிப்பெண்களுக்கு, புதிய நட்பால் உற்சாகம் உண்டு. கல்யாணம் கூடி வரும். புது உத்தியோகம் அமையும். மாணவ-மாணவிகள், ஆர்வத்துடன் படிப்பார்கள். நினைவாற்றல் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். மதிப்பெண் உயரும். அரசியல்வாதிகளின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். சில வி.ஐ.பி-களும் உங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவர்.  கலைத்துறையினருக்கு, பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும். பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களை பிரபலமாக்கு வதுடன், பண வரவையும் சொத்துச்சேர்க்கையையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: பிரதோஷ திருநாளில் காஞ்சிபுரத்தில் அருளும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வாருங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வினைகள் தீரும்.