Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபெயர்ச்சி பலன்கள்: விருச்சிகம்

வாய்மையே வெல்லும் என்பதை அனுபவத்தால் உணர்ந்தவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைகிறார். புது வியூகங்களால் முன்னேறத் துவங்குவீர்கள். தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும்.

எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தந்தை வழிச் சொத்துகள் வந்து சேரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளுக்கு

தீர்வு கிடைக்கும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனைவி உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். அவர்வழி உறவினரும் பக்கபலமாக இருப்பார்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத் தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும்.

குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால், முகமலர்ச்சியுடன் திகழ்வீர்கள். அதிக வட்டிக் கடனை, குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் மற்றும் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

குரு பகவானின் சஞ்சாரம்...

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குரு, தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு கூடும். வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சேவகாதிபதியும் சுகாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், வேலை கூடும். எதிர்பாராத காரியங்கள் முடிவடையும். தாயாருக்கு மூட்டு வலி, எலும்பு தேய்மானம் வரக்கூடும். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வீண் செலவுகள் வேண்டாம்.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை அஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், எவருக்கும் ஜாமீன் போட வேண்டாம். இருமல், சளித் தொந்தரவு, காய்ச்சல், மறைமுக நெருக்கடிகள், வாகன விபத்துகள் வந்து செல்லும். அயல் நாட்டில் இருப்பவர்கள் உதவுவர். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 10-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச் சொல் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், கனவுகள் நனவாகும். வி.ஐ.பி ஒருவரின் அறிமுகம் திருப்புமுனையை உண்டாக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், உணவு, என்டர்பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயம் உண்டு. விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். வங்கிக் கடனில் ஒருபகுதியைக் கட்டி முடிப்பீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள்.

உத்தியோகத்தில், உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிய பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பதவி, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

கன்னிப்பெண்களுக்கு நல்ல உத்தியோகம் அமையும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து, திருமணம் சிறப்பாக முடியும்.   மாணவ- மாணவிகள், நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடங்குவீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களது படைப்புகளை அரசு கௌரவிக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு அதிகரிக்கும். தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் அதிகம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, முதல் வரிசையில் உங்களை உட்காரவைப்பதுடன், வசதி- வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: அமாவாசை நாளில் திருவிடைமருதூரில் அருளும் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடுங்கள். வாரிசு இல்லாதவர்களுக்கு உதவுங்கள்.