Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபெயர்ச்சி பலன்கள்: மகரம்

பிறந்த மண்ணை மறவாதவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்கிறார்.

எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்வின் நெளிவுசுளிவு களைக் கற்றுக்கொள்வீர்கள். தம்பதிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திருமணம் தடைப்பட்டிருந்த அன்பர்களுக்குத் திருமணம் கூடிவரும்.

வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து, புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். அரசு விஷயங்கள் நல்லவிதமாக முடியும். மனைவி, உங்களின் புதிய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும்.  

குரு உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். கடின காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கௌரவப் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரர்களுடனான பிணக்குகள் நீங்கும். ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சொத்து விஷயத்தில் மீதிப் பணத்தையும் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

குரு பகவானின் சஞ்சாரம்:

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் விரயாதிபதியும் சேவகாதிபதியுமான குரு, தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், அவ்வப்போது உடலளவில் பலவீனமாக உணர்வீர்கள். சிலரை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்க்கவும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் ராசிநாதனும் தனாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். புது வேலை கிடைக்கும்.  

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரையிலும் உங்களின் சஷ்டமாதிபதியும் பாக்யாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். பூர்வீகச் சொத்தில் மராமத்துப் பணிகள் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்படும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சொந்தபந்தங்கள் மத்தியில் கௌரவம் கூடும். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 8-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள் வந்துசெல்லும்.  

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பணவரவு உண்டு. மகளுக்கு திருமணம் கூடி வரும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுமுன் சட்ட ஆலோசகரை ஆலோசிப்பது நல்லது. எவரையும் விமர்சிக்க வேண்டாம். சில நேரங்களில் சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள்.

வியாபாரத்தில், சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதுத் தொடர்புகள் கிடைக்கும். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். அயல்நாட்டில் இருப்பவர் களும் உதவுவர். உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கும் பங்குதாரர் வாய்ப்பார். சிலர், வேறு தொழிலுக்கு மாற வாய்ப்பு உண்டு. புரோக்கரேஜ், ஏற்றுமதி-இறக்குமதி, கன்ஸ்ட்ரக்ஷன், பதிப்பகம், கட்டட உதிரி பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில், உங்களின் தனித்தன்மை வெளிப்படும். மேலதிகாரிகளுக்கு நெருக்கம் ஆவீர்கள். எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு தாமதமின்றிக் கிடைக்கும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். சக ஊழியர்களில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் மனம் மாறும்.  

கன்னிப்பெண்களுக்கு, நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள். வேலை கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு, கடிதம் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாகும். மாணவ-மாணவியரின் எண்ணங்கள் பூர்த்தியாகும். விளை யாட்டில் பரிசு பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்பு இப்போது கூடிவரும். பிரபல கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். அரசியல்வாதிகள் பேச்சால் சாதிப்பார்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையை வளப்படுத்துவதுடன், வருங்காலத் திட்டங்களையும் நிறைவேற்று வதாக அமையும்.

பரிகாரம்: கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசக்கரபாணிப் பெருமாளை துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.