Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபெயர்ச்சி பலன்கள்: கும்பம்

சிந்தனைவாதிகள் நீங்கள். குரு 13.6.14 முதல் 4.7.15 வரையிலும் ராசிக்கு 6-ல் மறைகிறார். 'சகட குருவாச்சே... சங்கடங்களைத் தருவாரே...’ என்று கலங்காதீர்கள். உங்கள் யோகாதிபதிகளின் சாரங்களில் அவர் செல்வதால், ஒரளவு நல்லதே நடக்கும்.

முயற்சியால் முன்னேறப் பாருங்கள். மற்றவர்களின் பலம் - பலவீனத்தை அறிவீர்கள் என்றாலும், சில தருணங்களில் ஏமாறவும் வாய்ப்பு உண்டு. செலவுகள் உண்டு. வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். சிலர், புறநகர்ப் பகுதியில் குடியேறுவர். வி.ஐ.பி-களை பகைக்க வேண்டாம். அரசு வரிகளைச் செலுத்துவதில் தாமதம் வேண்டாம்.

குரு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், பணவரவு, குடும்பத்தில் நிம்மதி உண்டு. சாமர்த்தியமாகப் பேசி காய் நகர்த்துவீர்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், புது வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொன்றை விற்கவேண்டி வரும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.

குருபகவானின் சஞ்சாரம்...

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் தனாதிபதியும் லாபாதிபதியுமான குரு தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். புதுப் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். என்றாலும் செலவுகளும், வேலைச் சுமையும் தொடரும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் ராசிநாதனும் விரயாதிபதியுமான சனி பகவானின் பூசத்தில் குரு செல்வதால், செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புதிய நண்பர்களால் உற்சாகம் அடைவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள்.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும் அஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். பிள்ளை களால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். மகளின் பிடிவாதம் மாறும். மகனின் உயர்கல்வி, உத்தியோக முயற்சிகள் சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு.  

3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 7-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் செல்வதால், செல்வாக்கு கூடும். பணவரவு உண்டு. மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத் திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், திடீர் பயணங்களும், செலவுகளும் துரத்தும். பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை நினைத்து பயம் எழும். கர்ப்பிணிகளுக்கு உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வீடு, மனை வாங்கு வது, விற்பது நல்ல விதத்தில் முடியும். பணவரவு உண்டு.    

வியாபாரத்தில், அதிரடி மாற்றங்களால் லாபம் ஈட்டுவீர்கள். தொழில் போட்டி அதிகமாகும். புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக ஆதாயம் அடைவீர்கள். கடன் வாங்கியாவது சொந்த இடம் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வருவீர்கள். லோன் கிடைக்கும். சிமென்ட், கணினி உதிரிப் பாகங்கள், ரியல் எஸ்டேட், என்டர்பிரைசஸ் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற பலன் இல்லையே எனும் ஆதங்கம் எழும். உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போன்று செயல்பட முடிவெடுப்பீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலை அதிகமாகும். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும்.

கன்னிப் பெண்களுக்கு, பெற்றோருடனான மோதல் நீங்கும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். மாணவ-மாணவிகள் யோகா, தியானம் செய்து நினைவாற்றலை அதிகப்படுத்துங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். கலைத் துறையினருக்கு போட்டிகள், விமர்சனங்கள் அதிகரிக்கும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர் கள். அரசியல்வாதிகள், கோஷ்டிப்பூசலில் சிக்கவேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, செலவுகளையும், அலைச்சலையும் தந்தாலும், ஓரளவுக்கு வெற்றி பெற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: சஷ்டி திதி நாள்களில் விராலிமலைக்குச் சென்று ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுங்கள். வினைகள் யாவும் நீங்கும்.