Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபெயர்ச்சி பலன்கள்: மீனம்

ன்னம்பிக்கை மிகுந்தவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 5-ல் அமர்வதால், புதிய பாதையில் பயணிப்பீர்கள். அடிப்படை வசதி- வாய்ப்புகள் உயரும். தடுமாற்றம் நீங்கும். கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும் கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல மணப்பெண் அமைவாள்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து பங்கு கைக்கு வரும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற

பிரமை விலகும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு  நல்ல பலன் உண்டு. வழக்கு சாதகமாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து முடிப்பீர்கள். நட்பால் பலனடைவீர்கள். கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.

குரு உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். தந்தையாருடன் மனஸ்தாபம் நீங்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 11-வது வீட்டை குரு பார்ப்பதால், உங்களின் புகழ், கௌரவம் கூடும். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். வருமானம் உயரும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ஷேர் மூலமாக பணம் வரும்.

குரு பகவானின் சஞ்சாரம்...

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் ராசி நாதனும் ஜீவனாதிபதியுமான குரு தன் சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும். 29.6.14 முதல் 27.8.14 வரையிலும் உங்களின் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். வீடு, வாகன வசதி பெருகும். ஊர்ப் பொது நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் சுகாதிபதியும் சப்தமாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். தாய்வழி சொத்து சேரும். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 6-ல் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் செல்கிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். அரசால் அனுகூலம் உண்டு.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், காரியங்கள் கைகூடும். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். மனைவி உங்களது ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. இதமான பேச்சால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் புதுத் தொழில் அல்லது புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக்கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில், உங்களைப் பிடிக்காத மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். வழக்கில் வெற்றி பெற்று, இழந்த பதவியில் மீண்டும் அமர்வீர்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு. இயக்கம், சங்கம் சார்பாக பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கன்னிப்பெண்களுக்கு, உயர்கல்வியில் வெற்றி உண்டு. தடைப்பட்ட கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். நினைத்ததை சாதிப்பீர்கள். அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். மாணவ-மாணவிகளுக்கு, மதிப்பெண்கள் அதிகம் கிடைக்கும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். கலைத் துறையினருக்கு அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிக்கிடந்த படம் ரிலீஸாகும். அரசியல்வாதிகளின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். உங்களின் களப்பணி பாராட்டுக்கு உரியதாகும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, நீங்கள் தொட்டதை எல்லாம் துலங்கவைப்பதுடன், எதிர்பாராத திடீர் யோகங் களையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: பௌர்ணமி தினங்களில் நாமக்கல் சென்று, ஸ்ரீநரசிம்மரையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். துப்புரவுப் பணியாளருக்கு பொருளுதவி செய்யுங்கள். நினைத்தது நிறைவேறும்.