Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாவம் போக்கும் பவானி கூடுதுறையில் ஆடிப் பெருக்கு விழா!

ரோடு மாவட்டம், பவானியில் அமைந்துள்ள திருத்தலம்தான் "கூடுதுறை" எனப்படும் 'சங்கமேஸ்வரர் ஆலயம்'. இங்கு மூன்று நதிகள் ஒன்றாக கூடுவதால் இத்திருத்தலம் 'கூடுதுறை' எனப்பெயர் பெற்றது. மூன்று நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ள ஈசன் என்பதால், மூலவர் சங்கமேஸ்வரர் எனபடுகிறார். காசிக்கு செல்ல முடியாதவர்கள் நாடிவரும் ஆலயம் இது. இதனால் இந்த திருத்தலமானது 'தென்னிந்திய காசி’ எனவும், ’கொங்குமண்டல காசி' எனவும் அழைக்கப்படுகிறது.

ஆடிபெருக்கு விழா

கூடுதுறையில் வருடந்தோறும்  'ஆடிபெருக்கு’ விழாவானது மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பலப் பகுதிகளிலும் இருந்தும்  பக்தர்கள்  வந்து புண்ணிய நதியில் நீராடி, சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள். இந்தத் திருத்தலத்தில்தான் காவேரி, பவானி, அமிர்தநதி என மூன்று நதிகளும் ஒன்றாக கூடுகின்றன. இதனால் இந்த தலத்தில் உள்ள நதியில் குளித்துவிட்டு, உண்மையான பக்தியுடன் சங்கமேஸ்வரரை வழிபட்டால் நினைத்தது கைகூடும். மேலும் "தட்சினாயின புண்ணியக்காலை" எனப்படும் ஆடி மாதத்தில் சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசையை நோக்கி பயணிப்பார். அதனால் இந்த மாதத்தில் இந்த தலத்தில் வழிபடுவது மிகவும் நல்லது. ஆடிபெருக்கு நாளில்  இந்த புண்ணிய நதியில் குளித்து, ஈசனை வழிபடுட இன்னும் கூடுதலான பலன் கிடைக்கும்.

மேலும் படங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்: http://bit.ly/1oqWCej

இந்த ஆலயத்தின் நதிக்கரையில் அமைந்துள்ள அமிர்த லிங்கேஸ்வரரை ஆடி மாதம் 1ம் தேதியிலிருந்து 18ம் தேதிவரை புதிதாக திருமணமான தம்பதிகள் விரதமிருந்து வழிபட்டு, ஆடிபெருக்கு நாளில் நதியில் குளித்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், மேலும் வாழ்க்கை இன்பமாய் அமையும். இதனால் அதிக அளவில் புதுமணத் தம்பதிகள் ஆடிபெருக்கு நாளில் பவானி கூடுதுறையில் குளித்து, புத்தாடை உடுத்தி,சங்கமேஸ்வரரை வழிபட திருமண வாழ்க்கை இன்பமாய் அமையும்.மேலும் புதிதாக திருமணமான பெண்கள் இங்கு தாலி மாற்றிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆடிப் பெருக்கு அன்று தம்பதி சகிதமாக பவானி கூடுதுறையில் அமிர்த லிங்கேஸ்வரரையும், சங்கமேஸ்வரரையும், வேதநாயகி அம்மனையும் வழிபட்டு நினைத்த வரத்தை பெற்று செல்கின்றனர்.

செய்தி, படங்கள்: கு.ஆனந்தராஜ் (மாணவப் பத்திரிக்கையாளர்)