Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருக்கோகர்ணம் ஸ்ரீபிரகதாம்பாள் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா

திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் திருக்கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். திருக்கோகர்னேஸ்வரர் திருக்கல்யாணம் திருவிழா நடைபெற்று முடிந்த இந்நேரத்தில் ஆடிப்பெருக்குக்கு திரளான பக்தர்கள் கூட்டமாக திரண்டு அம்மனின் அருள் பெற்றனர்.

 

அங்கு வந்திருந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டிவிட்டு தங்களது பக்தியையும் அன்பையும் வெளிப்படுத்தினர். பொதுவாக ஆடிப்பெருக்குக்கு நாவற்பழம், கொய்யாப்பழம்,பேரிக்காய் படையல் இடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நாவற்பழங்களுக்கும், பேரிக்காய்களுக்கும் பெரும் தட்டுபாடு நிலவியது குறிப்பிடத்தக்கது.

- ர.நந்தகுமார்.