Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேலம் குகை மாரியம்மன் கோயிலில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி!

சேலம் குகை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் குகை மாரியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டு தோறும் ஆடி பண்டிகை நடைபெறும். அதன் மூன்றாம் நாளில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விஷ்ணு, மகாலட்சுமி, நாரதர், குபேரர், சிவன், பார்வதி, விநாயகர் போன்ற பல்வேறு இந்து தெய்வங்களின் வேடங்களை பக்தர்கள் அணிந்து, அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் கோயிலை ஊற்றி உள்ள தெருக்களில் ஊர்வலமாக வருவதையே வண்டி வேடிக்கை நிகழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (7ஆம் தேதி) வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் இருபது வண்டிகளுக்கும் மேல் கலந்து கொன்டன. இந்த நிகழ்ச்சியை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வண்டிக் குழுவினரை ஊக்குவிக்கும் வகையில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நினைவுக் கேடயமும், வண்டி வேடிக்கை பரிசளிப்புக் குழுவினர் சார்பில் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

புகைப்பட தொகுப்பை காண கீழே உள்ள linkஐ க்ளிக் செய்யவும்:

http://news.vikatan.com/article.php?module=news&aid=31125

செ.தினேஷ்குமார் (மாணவ பத்திரிகையாளர்)