Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மன்னருக்கு பார்வை வரம்; பக்தர்களுக்கு கூழ் பிராசாதம்

ண்டைய காலத்தில் "வீரபாண்டிய மன்னர்", பார்வைக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார்; மதுரைக்கு மேற்கேயுள்ள வைகையாற்றங்கரையில் அமைந்துள்ள "நிம்ப ஆரண்யத்தில்" வேட்டைக்குச்சென்றுவிட்டு, மன்னர் உறங்கிக்கொண்டிருந்தபோது, கனவில் தோன்றிய "கௌமாரியம்மன்" மன்னரின் பார்வைக்குறைபாட்டை நிவர்த்தி செய்ததாகவும், பார்வைக் குறைபாட்டைப் போக்கிய அம்மனுக்கு கோவில் எழுப்பி, மன்னர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது;

அத்தகைய சிறப்பு கொண்ட தேனி, வீரபாண்டி; "அருள்மிகு கௌமாரியம்மன்"  கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, நேற்று, அம்மனுக்கு விஷேச ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன; பின் அம்மன் முன்பு வைத்து படைக்கப்பட்ட கூழ் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் வீட்டிலிருந்து சமைத்து பக்தர்களால் கொண்டுவரப்பட்ட, "காணிக்கைக் கூழும்" இடம் பெற்றிருந்தது,குறிப்பிடப்படத்தக்கது. இதில் நேற்று, ஏறத்தாழ ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து அம்மன் அருள் பெற்றனர்.

 "மன்னருக்கு பார்வை வரமும், பக்தர்களுக்கு கூழ் பிரசாதமும்" வழங்கிய இத்திருத்தலத்தை, ஒருவர் வாழ்வில், ஒருமுறையேனும் வந்து தரிசித்து, இறையருள் பெறுவோம்.

 செய்தி, படங்கள்: மாரிமுத்து மணிகண்டன் (மாணவப் பத்திரிகையாளர்), தேனி & சிவகங்கை.