Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருவாரூரில் ஆடிப் பூரத் திருவிழா!

திருவாரூரில் ஆடிப்பூரத்தை ஒட்டி ஆதிபராசக்தி கோவிலில் நடைபெற்ற விழாவில் 10,000க்கும் மேற்பட்ட  மக்கள்  பங்கேற்றனர் .

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் சக்தி பீடங்களுள் ஒன்றாக விளங்கும் திருவாரூரில் ஆடிப்பூர விழா  நேற்று (17.08.2014) நடைபெற்றது.

தஞ்சை மண்டலத்தில் தஞ்சாவூர், நாலுவேதபதி, அதற்கடுத்தபடியாக திருவாரூரில் நடைபெற்ற இந்த நிகழ்வினை இதற்கான திருவாரூர் மாவட்ட தலைவர்  கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

அதிகாலை 3 மணி முதல் மதியம் 2 மணி வரை மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் கரங்களால் நேரடியாக ஆதிபராசக்திக்கு அபிஷேகம் செய்வித்தனர். வந்திருந்த அத்தனை பக்தர்களுக்கும் அன்னதானம் தரப்பட்டது.

தாங்கள் எதிர்பாரத்ததை விட அதிகமான கூட்டம் வந்திருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

இந்நிகழ்வு மாலை 4 மணி அளவில் அபிஷேக அலங்காரங்களுடன் நிறைவு பெற்றது.

செய்தி, படங்கள்: த.க.தமிழ் பாரதன், மாணவ பத்திரிக்கையாளர், திருவாரூர்