Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூம்புகார் கணபதி தரிசன கண்காட்சி
வார்த்தை வர்ணனைகளால் கவிபாடும் கவிதகளைப் போல் நுணுக்கமான வேலைப்பாடுகளின் எழில் ஈர்ப்பு விசையால் கண்ணைக் கவர்ந்து மனதைக் கொள்ளையடிக்கக்கூடியன  கைவினைஞர்களின் கலைப்படைப்புகள்.  அதிலும் இறை அழகை வெளிப்படுத்தும் கலைப்படைப்புகள் தனி வனப்பு மிக்கவை.
 
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் நடந்து வரும் கணபதி தரிசன விற்பனை மற்றும் கண்காட்சியில்  பலவிதமான கணபதி உருவச்சிலைகள் பித்தளை, சந்தனமரம், பஞ்சலோகம், கறுப்பு மற்றும் வெள்ளை உலோகம், களிமண், தஞ்சை ஓவியங்கள், தஞ்சை கலைத்தட்டுகள், காகிதக்கூழ், நூக்கமர உட்பதிப்பு வேலைப்பாடுகள், சலவை கற்கள், பித்தளை விளக்குகள் ஆகியவற்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
 
குறிப்பாக கறுப்பு, சிவப்பு, பச்சை நிற குர்த்தாவுடன் தன் வாகனான மூசிகனுடன் சதுரங்கம் விளையாடும் கணபதி, மூசிகனுடன் லேப்டாப்  பார்த்து ஓய்வெடுக்கும் கணபதி, கிட்டார் வாசிக்கும் கணபதி, கயிற்று கட்டிலில் ஓய்வெடுக்கும் கணபதி என இதுவரை காணாத கற்பனைக்கு நனவூட்டும்  கலைப்படைப்பாக அமைந்த விநாயகர் சிலைகள் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்தது.
 
புகைப்படத்தொகுப்பை காண லிங்கை க்ளிக் செய்யவும்:
 
செய்தி: இரா.ஆனந்தி
 
படங்கள்: த.ஸ்ரீநிவாசன்