Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கணபதி தரிசன கண்காட்சி - திருச்சி, பூம்புகார்

ண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டும் இம்மாதம் 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சியில் உள்ள பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை நிலையத்தில் "கணபதி தரிசன கண்காட்சி" கடந்த 21ஆம் தேதியில் இருந்து நடந்துக் கொண்டு இருக்கிறது.இக்கண்காட்சி செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.இக்கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை  நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியில் பல வகையான விநாயகர் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்காக இடம்பெற்றிருந்தது.

இந்த கண்காட்சி மற்றும் விற்பனையில் விநாயகர்  சிலைகள் பலவிதமான உருவத்திலும் வண்ணத்திலும் இடம்பெற்றிருகிறது. சந்தனமரம், வெள்ளைமரம், மார்பிள், தஞ்சை கலைத்தட்டு, கருங்கல், மாக்கல், மார்பிள் துகள்கள், வெள்ளை, கறுப்பு உலோகம், காகிதகூழ், களிமண், நவரத்தின கற்கள், தஞ்சை ஓவியம், வெல்வெட் துணி ஓவியம், ஜமிக்கி வேலைப்பாடு துணி ஓவியம், சில்க் ஓவியம் மற்றும் பல வடிவங்களில் கணபதி சிலைகள் காட்சிக்கும், விற்பனைக்காகவும் இடம்பெற்றிருந்தன.

குடை ஏந்திய பிள்ளையார், யானை மீது அமர்ந்து இருந்த பிள்ளையார் சிலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது . இக்கண்காட்சி 60 ரூபாய் முதல் 1 லட்சத்து 60 ஆயிரம் ருபாய் வரை பிள்ளையார் சிலைகள் விற்பனைக்காக வைகப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி, படங்கள்: தி.கௌதீஸ்