Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருவாரூர் மடப்புரம் குருதெட்சிணாமூர்த்தி மடத்தில் 179வது குருபூஜை விழா!

திருவாரூர் மடப்புரம் குருதெட்சிணாமூர்த்தி மடத்தில் 179வது குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.

குருதெட்சிணாமூர்த்தி சுவாமிகள் முக்தி அடைந்த நாளானஆவணி உத்திரமாகிய நேற்று நடைபெற்ற இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

இரண்டு நாட்களாக உற்சவமும் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வந்தன.

இரவு 9 மணிக்கு உற்சவ மூர்த்தி பல்லக்கில் வீதியுலா வந்தார். இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாதாள பூஜை நேற்று  27.08.2014 இரவு 12 மணிக்கு  நடைபெற்றது. இதற்கு மடாதிபதி கிருஷ்ணாணந்தா சுவாமிகள் முன்னின்றார்.

மனஅமைதிக்கு வழிவகுக்கும் தெட்சிணாமூர்த்தி சுவாமிகளை வழிபட கூடியிருந்த பக்தர்களுக்கு, விழாக்குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. இது ஒருபுறம் நிகழ, இன்னொரு புறம் இசை விருந்தும் மக்களுக்கு படைக்கப்பட்டது.

மக்கள் நள்ளிரவு வரை காத்திருந்து இறைவனை வழிபட்டுச் சென்றனர்.

செய்தி மற்றும் படங்கள்: த.க.தமிழ் பாரதன்  (மாணவ பத்திரிக்கையாளர்)