Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

11 அம்மன் கோவில்களில் தசரா விழா! - சிறப்புப் புகைப்படத் தொகுப்பு

தூத்துக்குடி மாவாட்டம்  குலசேகரபட்டினம்  முத்தாரம்மன் கோவில் தசரா விழா  நேற்று (24.09.14, புதன் கிழமை) தொடங்கியது. அதேபோல், தசரா விழாவுக்கு  சிறப்பு  பெற்ற  நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை தசரா விழா  கோலாகலமாக தொடங்கியது.

பாளையங்கோட்டையில்  உள்ள  ஆயிரத்தம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன்,  வடக்கு முத்தாரம்மன்,  யாதவ உச்சிமாகாளி அம்மன்,  விஸ்வகர்ம உச்சிமாகாளி அம்மன், வடக்கு உச்சிமாகாளி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், உலகம்மன், புது உலகம்மன் கோவில் ஆகிய 11 கோவில்களில் தசரா விழா  கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்கார  தீபாராதனை  நடந்தது. நள்ளிரவு  12 மணி அளவில் 11 கோவில்களின்  சப்பரங்களும்  வீதியில் உலா வந்தன.

வருகிற 3ம்  தேதி  10ம்  தசரா அன்று இரவு சூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார  நிகழ்ச்சி  நடைபெறும்..

செய்தி மற்றும் படம்: ஆ. நல்லசிவன்