Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிக்கு 76-வது குரு பூஜை விழா

பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிக்கு நேற்று (10.10.2014) 76-வது குரு பூஜை விழா நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் இந்த குரு பூஜை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த வருடம் நேற்று வெள்ளிக்கிழமை இந்த குரு பூஜை விழா நடைபெற்றது.

இதில் தீயணைப்பு துறையினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிக்கு அழகாக அலங்காரம் செய்து வழிபட்டனர். இந்த குரு பூஜையில் கலந்துகொண்டவர்கள் சுவாமியின் அருள் கிடைத்ததாகவும், இந்த வருடமும் குரு பூஜை விழா சிறப்பாக இருந்ததாகவும் கூறினர்.

- ர.ரஞ்சிதா, மாணவ பத்திரிகையாளர்