Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை இன்று என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் கடந்த 4ஆம் தேதி முடிவடைந்தது. இருந்தபோதிலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் நேற்று முதலே குவியத் தொடங்கினர். பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தர்ம தரிசனத்துக்கு 28 மணி நேரம் ஆனது.

கால்நடை பக்தர்கள், 20 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு கட்டண பக்தர்கள் 5 மணி நேரமும் தரிசனத்துக்காகக் காத்து நின்றனர். பாத யாத்திரை பக்தர்களின் வசதிக்காக , திவ்ய தரிசன டோக்கன் வழங்குவது இன்றும் நாளையும் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

தர்ம தரிசனத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் கூறினார்கள்.