Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபங்கள் திருவிழா கண்காட்சி!

மிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'தீபங்கள் திருவிழா' என்ற பெயரில் சென்னை அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில்  கண்காட்சி ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த கண்காட்சி வரும் 21ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்தக் கண்காட்சியில் பித்தளை, களிமண், மாக்கல் போன்ற பலவகை கைவினைப்பொருட்களினால் தயாரிக்கப்பட்ட விளக்குகள் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விறபனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறிய விளக்கு முதல் 60 அடி வரையிலான விளக்குகளும் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் இந்தக் கண்காட்சியில், தஞ்சாவூர் படங்கள், கைத்தறித் துணிகள் போன்றவையும் இடம் பெற்றிருக்கின்றன.

இக்கண்காட்சியில் ரூ.100 லிருந்து இரண்டு லட்ச வரையிலான விளக்குகளும் இடம் பெற்றிருக்கின்றன. தனி விளக்குகளும், தூப ஆராதனைகளுக்கு என தனி விளக்குகளும் உள்ளன. ஒரே இடத்தில் பல விளக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பது தனி அழகுதான்.

- இ.லோகேஸ்வரி