Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடி மாதம் ஏன் கூழ் ஊற்றுகிறார்கள் தெரியுமா ?

ஆன்மிகமும் அறிவியலும்...

டி மாதம் பிறக்கும் காலமானது, கோடை காலத்துக்கும் மழை காலத்துக்கும் இடையில் தொடங்குகிறது. இந்த காலத்தில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். ஆடி மாத காற்றோடு பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் காற்றில் அதிகம் பரவும். இதனால் அம்மை போன்ற நோய்கள் வேகமாக பரவுகிறது.

இதிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சரியான தடுப்பு மருந்து - வெங்காயமும் மோரும் கலந்த கேழ்வரகு கூழ்தான் என்று ஆராய்ந்து உணர்ந்த நம் முன்னோர், மக்கள் அனைவரையும் கூழ் குடிக்க வைக்க, ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றி பிரசாதமாக கூழை கொடுத்து வந்தனர். இந்த வழக்கம்தான் இன்றைக்கும் தொடர்கிறது. ஆடி மாதம் கூழ் ஊற்றும் வழக்கம் மட்டும் இல்லை என்றால் , ஓர் மருந்தான உணவை நாம் மறந்திருப்போம். நம் முன்னோர்கள் அறிவியல் ஆற்றல் மட்டுமல்லாமல், அதை ஆன்மிகம் வாயிலாக மக்களுக்கு கொண்டு செல்லும் பக்குவத்தையும் அறிந்திருந்தனர் என்பது இதுபோன்ற சான்றுகளால் தெரியவருகிறது.

-ரெ.சு.வெங்கடேஷ்