Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருவண்ணாமலையில், கார்த்திகை தீபம் - மூன்றாம் நாள் திருவிழா

திருக்கார்த்திகை தீபத்தையொட்டி, திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் துவங்கி திருவிழா நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (28.11.2014) மூன்றாவது நாளாக உற்சவ திருவிழாவில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் பூதவாகனத்தில் வலம் வந்தனர். 

பின் அண்ணாமலையாருக்கு1008 சங்காபிஷேகம் நடந்தது. அதாவது, 1008 சங்குகள் வைத்து அதில் நீர் நிரப்பி பூஜித்து அதனைக் கொண்டு அபிஷேகம் செய்வது. அபிஷேகங்களிலேயே மிகச்சிறந்ததாக கூறப்படுவது சங்காபிஷேகம். சங்காபிஷேகம் செய்தால் செல்வம் கிட்டும்; பலன் கூடும் என்பது நம்பிக்கை. சில விசேஷங்களில் 108 சங்காபிஷேகம் செய்வதுகூட உண்டு. புஷ்பம் கொண்டு வணங்கி பூஜை செய்து அந்த நீரில் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கி வளம் பெருகும். 

 

இந்த1008 சங்காபிஷேகத்தைக் காண பெரும்பாலானோர் வெளியூரிலிருந்தும் வந்திருந்தனர். உற்சவத்தின்போது உண்ணாமலையம்மன் சகிதம் அண்ணாமலையார் சிம்ம வாகனத்தில் காட்சியளித்தார். விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்னவாகனத்திலும் வலம் வந்தனர். பக்தர்கள் கூட்டத்தின் நடுவில் மாடவீதியில் பஞ்சமூர்த்திகளும் சுற்றி வந்தனர்.


- ர.கீர்த்திகா (மாணவ பத்திரிகையாளர்),

படங்கள்: கா.முரளி