Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அயனாவரத்தில் பரசுராம ஜெயந்தி விழா!

விஷ்ணு அவதாரத்தில் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம். எத்தனையோ பல அற்புதங்களை பரசுராம அவதாரத்தில் இறைவன் நிகழ்த்தி இருக்கிறார். பரசுராமரின் ஜயந்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. பரசுராமருக்கென தனிக் கோயில்கள் அதிகம் இல்லை என்றாலும், பரசுராமர்  வழிபட்ட  சிவாலயத்தில் பரசுராம ஜயந்தி விழா சிறப்பாக நடைபெறுகிறது.

சென்னை அயனாவரத்தில் உள்ள அருள்மிகு பரசுராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்தான் பரசுராமர் வழிபாடு செய்த இடம். இதனால் ஒவ்வொரு வருடமும் இக்கோயிலில் பரசுராம ஜயந்தி விழா கொண்டாடாப்படுகிறது.

இந்த வருடம் பரசுராம ஜயந்தி நேற்று (8.9.14), 108 கலச அபிசேகம், சிறப்பு யாக பூஜையும் நடத்தப் பட்டது. ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. பரசுராம ஜயந்தியை முன்னிட்டு பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

 

பெண்களுக்கு மாங்கல்யம், பூதட்டு,தேங்காய், மஞ்சள் முதலானவை பிரசாதமாக வழங்கப்பட்டது. அதுபோல 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

40 ஆண்டுகள்  கொண்டாடாமல் இருந்த பரசுராம ஜயந்தி விழா, கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து இக்கோயிலில் நடைபெற்று வருகிறது. 

- இ.லோகேஸ்வரி
படங்கள்: சே.சின்னதுரை (மாணவ பத்திரிக்கையாளர்)