Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை சனிப்பெயர்ச்சி...

நாளை,மார்கழி மாதம் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை (16.12.14), கிருஷ்ண பட்சம், தட்சிணாயன புண்ய காலம், ஹேமந்த ருது, ஆக்ரஹாயனம், தசமி திதி, அஸ்த நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம் பத்தரை நாமகரணம், நேத்தரம், ஜீவனம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில், பஞ்ச பட்சியில் காகத்தின் வல்லமை காலத்தில், மதியம் 2 மணி 16 நிமிடத்துக்கு திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.

சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.14 முதல் 17.12.2017 வரை அமர்ந்து, தனது கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளை நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு  அதிகரித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சனிக்கிழமை அன்று சனிபகவானை தரிசனம் செய்தனர்.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு  முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் 16-ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு நடைபெறவுள்ளது. துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி, இக்கோயிலில் நடைபெறவுள்ள விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் ஏறத்தாழ செய்து முடித்துள்ளன.

சனிப்பெயர்ச்சியையொட்டி, பக்தர்கள் ஏற்கெனவே வழிபாட்டை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். கடந்த சில வாரங்களாகவே சனிக்கிழமைகளில் திருநள்ளாறு பக்தர்களால் நிரம்பி வழிந்தது. கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் திருநள்ளாறு கோயிலில் கட்டண முறையிலும், தர்ம தரிசன முறையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை 4 மணி முதல் நளன் குளத்தில் பக்தர்கள் நீராடத் தொடங்கி, பின்னர் குளக்கரையில் உள்ள நளன் கலி தீர்த்த விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து, கோயிலுக்கு தரிசனத்துக்குச் சென்றனர். சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கடந்த இரண்டரை ஆண்டு காலமாக வியாபார வீடான துலாம் ராசியில் அமர்ந்து வியாபாரத்தை முடக்கிய சனிபகவான், இப்போது பூமி காரகனாகிய செவ்வாயின் வீட்டில் நுழைகிறார். விருச்சிக ராசிக்குள் சனி அமர்வ தால் வியாபாரம் தழைக்கும்.
இந்த சனிப்பெயர்ச்சி எல்லோருக்கும் நல்லதாய் அமைய எல்லாம் வல்ல சனிபகவானை பிரார்த்திப்போம்.

- இ.லோகேஸ்வரி