Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் பங்குனி உத்திரம்!

பங்குனி மாதம் பெளர்ணமியோடு உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள் பங்குனி உத்திரம் எனப்படுகிறது. இந்நாளில் தமிழகம் முழுவது உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் காவடி எடுத்து முருகனை தரிசிக்கின்றனர். பெரும்பாலான கோயில்களில் அம்பாள் சமேதராக இறைவன் காட்சியளிப்பது பங்குனி உத்திரத்தில் தான். ஒவ்வொரு ஊரிலும் பங்குனி உத்திர வழிபாடு வெவ்வேறு வகையில் நடைபெறுகின்றனர் அதில் சில...

கும்பகோணம்-திருவையாறு சாலையில் உள்ளது திங்களூர். இங்குள்ள கயிலாசநாதர் சமேத பெரியநாயகி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று காலை 6 மணி அளவில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படுகிறது. அன்று சூரிய பூஜையும், மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் படர்வதால், சந்திர பூஜையும் நடைபெறுகிறது.

Click to enlarge



தி ருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையில் திருவாரூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் வரும் கிராமம் பொன்னிறை. இங்குள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில், அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத் துக்கு பங்குனி உத்திரத்தன்று, நெல்லிக் கனிப் பொடி மற்றும் அரிசி மாவால் அபி ஷேகம் செய்கிறார்கள். இதனால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

நாகை மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயிலின் மூலவர் சுயம்பு மூர்த்தி. இறைவி: அருள்மிகு கறுத்தார் குழலி. ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார், பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு நிதி வேண்டி திருப்புகலூர் வந்தார். இரவில் அவர், ஆலய வளாகத்தில் செங்கற்கள் சில வற்றை தலைக்கு வைத்துத் தூங்கினார். மறு நாள் காலை அவர் எழுந்து பார்த்தபோது அந்த கற்கள் பொன்னாக மாறியிருந்தது. அதனால் இன்றும் புது வீடு கட்டுவோர், செங்கல்லை இங்கு கொண்டு வந்து பூஜித்து, மனை முகூர்த்தம் செய்கின்றனர். இதனால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

சில பகுதிகளில் பங்குனி உத்திரம், ஐயனாரின் அவதார தினமாகக் கருதப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்- புதுக்குடி கிராமம், காடய்யனார் கோயி லில், ஐயனார் சிலை குப்புறக் கவிழ்ந்த கோலத்தில் உள்ளது. அந்த நிலையிலேயே பக்தர்கள் அபிஷேகம், ஆராதனை செய்து ஐயனாரை வழிபடுகின்றனர்.

நெல்லை மாவட்டம், கருங்குளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில், பங்குனி உத்திர விழாவன்று ஆண்கள் தங்கள் வாயில் துணியைக் கட்டிக் கொண்டு, 63 கிலோ பச்சரிசியை உரலில் இடித்து, அந்த மாவால் ஒரே கொழுக்கட்டை தயாரித்து, ஐயப்பனுக்குப் படைக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம்- வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பங்குனி உத்திரத்தன்று மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகில் தெப்பம் உருவாக்குகின்றனர். அதில் வள்ளி- தெய் வானை சமேதராக ஸ்ரீசிவசுப்பிரமணியர், சுமார் ஐந்து கி.மீ. தூரம் வரை கடலில் பவனி வருகிறார். மற்றொரு படகில், மங்கள இசை முழங்க இசைக் கலைஞர்களுடன் பக்தர்களும் செல்கிறார்கள்.