Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று சந்திர கிரகணம்

ன்று (4.4.2015, சனிக்கிழமை) பிற்பகல் 3.45 மணி தொடங்கி மாலை 7.15 மணி வரை சந்திரகிரகணம் நிகழவுள்ளது.

ஹஸ்த நட்சத்திரம் பெளர்ணமி திதியில் நிகழும் இந்த சந்திர கிரகணத்தின் போது நீர்நிலைகளில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று காய்த்ரி ஜெபம் செய்ய வேண்டும். மேலும் கோயில்களிலும், வேத சாலைகளிலும் கிடைக்கும் சந்திரகிரகணம் பாடல் எழுதப்பட்ட பனை ஓலையை நெற்றியில் கட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த காலகட்டத்தில் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.  கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வீட்டு வாசலிலும் முற்றத்திலும் தர்பைப் புல் வைப்பது நல்லது. ஹஸ்தம், திருவோணம், ரோகிணி, உத்திரம், சித்திரை ஆகிய நட்சத்திரக்காரர்கள் கிரகண சாந்தி(பரிகாரம்) செய்வது அவசியம். கிரகணம் முடிந்ததும் கோயிலுக்குச் சென்று பச்சரிசி, வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை  தட்சிணையாக கொடுத்து பரிகாரம் செய்து கொள்ளலாம். பழநி , திருப்பதி உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கிரகண நேரத்தில் நடை சாற்றப் படுகிறது. கிரகணம் முடிந்த பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.