Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - (மன்மத வருடம் - 2015)

வாசக நேயர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

(14-4-2015 முதல் 13-4-2016 வரை)

மிழ் வருடங்கள் 60 ஆகும். பிரபவ முதல் அக்ஷய வரை.  இந்த வரிசையில் மன்மத வருஷம் 29-ஆவது வருடம் ஆகும்.

திருக்கணிதப்படி 14-4-2015, செவ்வாய்க் கிழமை, தேய்பிறை தசமி, அவிட்ட நட்சத்திரம், சித்தயோகம், சுப யோகம், பவ கரணம், பிற்பகல் 1.45 மணிக்குத் தமிழ்ப் புத்தாண்டு மன்மத வருடம் பிறக்கிறது.

மன்மதத்தின் மாரி உண்டு வாழும் உயிர் எல்லாமே
நன்மை மிகும் பல் பொருளும் நண்ணுமே - மன்னவரால்
சீனத்தில் சண்டை உண்டு தென் திசையில் காற்று மிகும்
கானப் பொருள் குறையும் காண்.

பொருள்: மன்மத வருஷத்தில் நல்ல மழை பொழியும். உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் மிகுந்த நன்மை உண்டாகும். மனிதர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் மிகுதியாகக் கிடைக்கும். சீன நாட்டில் சண்டை ஏற்படும். இந்தியாவின் தென் திசையில் மிகுந்த காற்று வீசும். காட்டிலிருந்து கிடைக்கும் பொருட்கள் குறையும்.

இந்த வருஷத்துக்கு ராஜா சனி ஆவார்.  நல்ல மழை பொழியும். அரசாங்கத்தினர் கட்டுப்பாட்டுடன் இருப்பர்.

வடநாட்டில் பயிர் சேதம் உண்டாகும். மேற்கு இந்தியாவில் பயிர் செழிக்கும். மன்மதன் என்றாலே காமதேவனின் வருடம் என்று சொல்லலாம். ஒருவருக்கொருவர் அன்பு மிகும். காதல் விவகாரங்கள் அதிகரிக்கும். காதல் திருமணங்கள் அதிகம் நடக்கும். ஒவ்வொருவரும் தங்கள் அழகை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். சந்தோஷமாக வாழவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். நாட்டில் வளம் பெருகும். எண்ணெய் வித்துக்கள் அதிகம் கிடைக்கும். நெய் விலை குறையும். திடப் பொருட்களின் உற்பத்தி அதிகமாகும். மழை அதிகம் பொழியும் ஆதலால் தானியங்களில் விளைச்சல் பெருகும்.


கோசாரப்படி சூரியனும் புதனும் செவ்வாயும் மேஷத்தில் இருப்பதால் மின்சாரம், எரிபொருள், எலெக்ட் ரானிக்ஸ், ரியல் எஸ்டேட் இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.

சுக்கிரன் ரிஷபத்தில் இருப்பதால் நல்ல மழை பொழியும். பண்ணைத் தொழில் வ்ளர்ச்சி பெறும். கால்நடைகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். விவசாயிகள் அதிக விளைச்ச்லின் காரணமாக மகிழ்வார்கள். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும் ஆண்டு இது. பெண்களுக்கான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும். ஒப்பந்தக்காரர்களுக்கு வருவாய் அதிகம் கிடைக்கும்.

குரு கடகத்தில் இருப்பதால் நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். சுக, சந்தோஷத்துக்காக நிறையச் சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரும்.

ராகு கன்னியில் இருப்பதால் வெளிநாட்டு உறவு வலுக்கும். அந்நிய முதலீடு அதிகமாகும். போக்குவரத்து இனங்களில் முதலீடு செய்வதின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

சனி விருச்சிகத்தில் இருப்பது விசேடமாகாது. சமூக விரோதிகள் அதிகரிப்பார்கள். கெட்ட காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். கொடூர குணம் உண்டாகும். சண்டை, சச்சரவுகள் அதிகரிக்கும். மேலும் இந்த ஆண்டின் ராஜாவாக சனி வருவதால் எல்லோரும் சனி வழிபாடு செய்வது அவசியமாகும். கூட்டுப் பிரார்த்தனை மூலமும் நலம் பெறலாம்.

அனைத்துத் தரப்பினருகும் அவரவரது இஷ்ட தெய்வத்தை வழிபடுவது நல்லது. அதன் மூலம் துன்பம், துயரம், நோய்நொடிகள், சங்கடங்கள் ஆகியவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும். சனி ஜன ராசியில் இருப்பதால் ஜல சம்பந்தமான இனங்களால் உயிர்ச்சேதம் அதிகமாகும்.

கேது மீனத்தில் இருப்பது நல்லது. கால புருஷனின் ராசிக்கு 12-ஆமிடம் மோட்ச வீடாகும். மோட்ச ஸ்தானத்தில் மோட்ச காரகன் கேது இருப்பதால் மோட்ச சாதனங்களிலும், த்யானம், யோகா, ஜோதிடம், அறநிலையம் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபாடு அதிகமாகும்.

பொதுவாக இந்த ஆண்டு ஆதாயம் குறைந்து, விரயம் அதிகமாகும்.

இனி பன்னிரண்டு ராசிகளுக்கும் உரிய மன்மத வருடப் பொதுப் பலன்களைப் பார்ப்போம்.

உங்களின் பலன்களை அறிய,

 உங்களின் ராசிக்குரிய படங்களை க்ளிக் செய்யவும்

 

மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம்
தனுசு மகரம் கும்பம் மீனம்