Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சித்திரைத் திருவிழா - 6ம் நாள்

துரை சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று (26.04.2015) அன்று காலை 7 மணியளவில் சொக்கரும், மீனாட்சியும் கோயிலுக்குள் சிவகெங்கை ராஜா மண்டகப்படியில் எழுந்தருளினர். பின்னர், 6 மணியளவில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நடைபெற்றது. காலையில், மாசி வீதிகளில் வலம் வந்த சொக்கரும் மீனாட்சியும் இந்த வரலாற்று லீலை நிகழ்ச்சியில் எழுந்தருளினார்கள். மதுரை ஆதீனம் மடம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது . அப்போது நாயன்மார்கள் 63ல் முதல் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலைநாட்டிய வரலாறு ( சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை)  தல ஓதுவரால் சொல்லபட்டது.

 

முன்பொரு காலத்தில் நெடுமாற பாண்டியனால் பாண்டியநாடு சமண சமயம் சார்ந்து இருந்தமையை மங்கையர்கரசியார் மற்றும் குலச்சிறையார் என்ற இருவர் வாயிலாகத் தெரிந்து மதுரைக்கு புறப்பட்டார் ஞானசம்பந்தர். அங்கு சென்று பாண்டிய மன்னனின் வெப்பு நோயை “திருநீற்று பதிகம்” பாடி அகற்றினார். மேலும், அனல் வாதத்தையும் புனல் வாதத்தையும் பச்சை பதிகம் பாடி அகற்றினார். இவ்வாறாக பாண்டிய மன்னனையும், பாண்டிய நாட்டு மக்களையும் சைவம் தழுவ செய்தார் என்பது தான் அந்த வரலாறு.

இரவு 7 மணியளவில் ஆலவாய் சொக்கனும், அங்கயற்கன்னியும் ரிஷப வாகனத்தில் மாசி வீதியை யானை, கோ, சாமரம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்கால் ஆட்டம், கோலாட்டம் என பரிவாரங்களோடும் சைவ சமய குரவர்களோடும் பக்த கோடிகள் சூழ பவனி வந்து அருட்காட்சி தந்தனர். மேலமாசி வீதியிலுள்ள திருக்கண் மண்டகப்படியில் வானத்து தேவர்கள் பூச்சொறியும் விழாவும் நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவின் 7-ம் நாளான இன்று மீனாட்சி சொக்கநாதர் நந்தீசுவர யாளி வாகனத்தில் பவனி வந்து திருக்காட்சி தருகின்றனர்.

- ப.சூரியராஜ், மாணவப்பத்திரிகை நிருபர், மதுரை.

புகைப்படங்கள்: ந.ராஜமுருகன், மாணவப்பத்திரிகை நிருபர், விசாகப்பட்டிணம்.