Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூமித் தாயைப் பிரார்த்திப்போம்!
ஸங்கல்ப கல்பலதிகாம வதிம் க்ஷமாயா:
ஸ்வேச்சா வராஹ மஹிஷீம்ஸீலபாநுகம்பாம்
விஸ்வஸ்ய மாதர மகிஞ்ந காமதேநும்
விஸ்வம் பராமஸரண : ஸரணம் ப்ரபத்யெ 

கருத்து: எண்ணியவற்றை எல்லாம் தரும் கற்பகத் தருவாகவும், பொறுமை எனும் குணத்தின் எல்லையில் நிற்பவளாகவும், திருமால் வராஹ மூர்த்தியாக அவதரித்தபோது, அவரின் மனம் கவர்ந்த தேவியாகவும், கதியற்றவர்களுக்கு காமதேனுவாகவும், உலகை ஈன்ற தாயாகவும், எளிதில் அருள்பவளாகவும் விளங்கும் பூமித் தாயை புகலிடமாகப் பற்றுகிறேன்.

பூமித் தாயைப் போற்றி தேசிகர் அருளிய இந்தத் துதிப்பாடலைப் பாடி நாமும் வணங்குவோம்.

துயரங்கள் இனியும் தொடராமல் இருக்க 
அவள் அருளட்டும்.