Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்

துரை சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான (29.04.2015) இன்று காலை 8.00மணியளவில் புறப்பட்டு சுவாமியும் அம்மனும் கோயிலுக்குள் சிவகங்கை ராஜா மண்டகப்படியில் எழுந்தருளினர்.

 

மாலை 6 மணியளவில் ஆலவாய் சொக்கனும், அங்கயற்கன்னியும் இந்திர விமானத்தில் மாசி வீதியை , யானை, கோ, ஒட்டகம், சாமரம், சிறுவர்களின் கரகாட்டம்,ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம், கோலாட்டம், நாக நடனம் என பரிவாரங்களோடு பக்த கோடிகள் சூழ பவனி வரவுள்ளனர். பின்னர் மேலமாசி வீதியிலுள்ள திருக்கண் மண்டகப்படியில் வானத்து தேவர்கள் பூச்சொரியும் விழாவும் நடைபெறவுள்ளது

.

 

பின்னர் வடக்கு மாசி வீதி, கீழ மாசி வீதி சந்திப்பு இடத்தில் லாலாஸ்ரீ ரெங்கசத்திரம் திருக்கண் மண்டபத்தில் அருள்மிகு மீனாட்சி அம்மனின் திக்கு விஜயம் நடைபெறுகிறது. எட்டு திக்குகளையும் வென்ற மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைத்த சம்பவத்தை நினைவூட்டும் நிகழ்ச்சியாக இது கொண்டாடப்படுகிறது.

 

நாளை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி பாண்டிய மன்னனாகவும், மீனாட்சியை தாரை வார்த்து கொடுப்பதற்காக, அருள்மிகு பவளக்கனிவாய்ப் பெருமாளும் காலை 6.00 மணிக்கு மீனாட்சி கோயிலுக்கு வருகையளிக்கின்றனர். நாளை அதிகாலை 4 மணிக்கு சேத்தியில், அழகர் சாமி நாயுடு திருக்கண் ஆகி, சூறாவளி சுப்பைய்யர், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளாகி, நான்கு சித்திரை வீதிகள் சுற்றி வந்து பின் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளி காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கோயிலுக்குள் திருக்கல்யாணம் மண்டபத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற இருக்கிறது.

மாலை 7.00 மணியளவில் அம்மன் புஷ்ப பல்லக்கிலும், அய்யன் யானை வாகனத்திலும் பவனி.

-ப.சூரியராஜ்,

மாணவப்பத்திரிகை நிருபர்,

மதுரை