Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நாளை மகாகும்பாபிஷேகம்!

பாரம்பரியமான சிதம்பரம் நடராஜர் ஆலையத்திற்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவிற்கு தமிழகம் மற்றும் பல மாநிலங்களிலிருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகா கும்பாபிஷேகம், நாளை காலை,7:00 மணிக்கு நடக்கிறது. இக்கோவிலில் இதற்கு முன் கடந்த, 1955, 1987ம் ஆண்டுகளில், நான்கு ராஜகோபுரம் உட்பட, அனைத்து சன்னிதிகளுக்கும், மகாகும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, 27 ஆண்டுகளுக்குப் பின்,நாளை, மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. 40 ஏக்கர் பரப்பில், நான்கு ராஜ கோபுரங்கள், ஒன்பது வாயில்கள், 15 பிரதான சன்னிதிகள் கொண்டது இக்கோவில்.கடந்த 25ம் தேதி முதல்,யாக பூஜைகள் நடந்து வருகின்றது. நாளை, 1ம் தேதி காலை, தம்பதி பூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜை.நாளை காலை 7:00 மணிக்கு, சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்தி சித்சபை, ஆயிரங்கால் மண்டபம், நான்கு ராஜகோபுரங்கள் ஆகியவற்றுக்கு, ஒரே நேரத்தில், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

 நாளை இரவு, பஞ்சமூர்த்திகளுடன்  தெருவடைச்சான் உற்சவம் நடைபெறுகிறது. இதில் விநாயகர்,முருகன், சாண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாம சுந்தரி ஆகியோர் ஒன்றாக பவனி வந்து மக்களுக்கு காட்சியளிப்பர் , பின், சித்சபையில், சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைக்கு பின் நடராஜர் சித்சபையில் இருந்து கனகசபைக்கு எழுந்தருளுகிறார்.நாளை இரவு, பஞ்சமூர்த்திகளுடன் தெருவடைச்சான் உற்சவத்தில் நடராஜர் வீதியுலா நடக்கிறது.நாளை மறுநாள், 2ம் தேதி காலை, நடராஜர் சுவாமி சிறப்பு தேரோட்டம் நடக்கிறது.மாலையில், ராஜசபை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளுகிறார். அன்றிரவு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. தென்னாடுடைய சிவனே போற்றி.

ஜி.கே.தினேஷ்.,
விகடன் மாணவ பத்திரிகையாளர்,

சிதம்பரம்.