Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரணாசியில்... காஞ்சி மஹா ஸ்வாமிகளின் 122-வது ஜயந்தி மஹோத்ஸவம்!

றைத்தன்மையில் இருந்து நழுவிய மனிதன், வாழ்க்கை முழுவதும் ஆன்மிகத்தில் பல முயற்சிகளில் ஈடுபட்டு தன்னை உணர்ந்து, இறுதியில் இறைவனிடம் கலப்பதே, ‘முக்தி’ எனப் படுகிறது. இப்படியான முக்தியை எளிதில் அடைய உதவுவதால், முக்தி க்ஷேத்திரங்களில் முதன்மையாகக் கருதப்படுகிறது வாரணாசி எனப்படும் காசி. இந்தத் தலத்தில்தான், ஶ்ரீ ஆதிசங்கரர் தாம் அருளிய அத்வைத சித்தாந்த நூல்களை, வாதத்தின் மூலம் நிலைநாட்டியதாக வரலாறு விவரிக்கிறது.

அற்புதமான இந்த க்ஷேத்திரத்தில், காஞ்சி மஹாபெரியவரின் 122-வது ஜயந்தி மகோத்ஸதவத்தை முன்னிட்டு, ஜூன் 2 முதல் ஜூன் 16-ம் தேதி வரையிலும் யஜுர் வேத ஜடா பாராயணம் மற்றும் சமித்தமூல பாராயணம் நிகழவுள்ளது, நாம் செய்த பாக்கியமே!

இறைவனின் மூச்சுக் காற்றான வேதத்தையும், வேத தர்மத்தையும் புனருத்தாரணம் செய்வதையே தமது அவதார கடமையாக ஏற்று வாழ்ந்த- பூஜ்ய ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமிகள், பாமர மக்களோடு அளவளாவிய நடமாடும் தெய்வம் என எல்லோராலும் போற்றப்பட்டவர்.
அவர், உலக நன்மைக்காகவும், கோயில்களின் புனித தன்மையைக் காப்பாற்றவும்... தென்னிந்தியாவில் நான்கு ராஜ கோபுரங்கள் அமைந்த திருக்கோயில்களில், உற்ஸவ காலங்களில், வேத வாக்கியங்களை ஜடை பின்னுவது போல் தொகுத்துப் பாராயணம் செய்யும் முறையை வேத விற்பன்னர்கள் மூலம் நடைமுறைப்படுத்தினார்.

ஸ்ரீமகாபெரியவாளின் கட்டளைப்படியே, இதோ அவரது 122-வது ஜயந்தி மஹோத்ஸவத்தில், ஶ்ரீ விஸ்வேச்வர ராஜதானியான காசி திருத்தலத்தில், உத்தரவாகினியும் மிகப் புனிதம் மிக்கதுமான கங்கையின் கரையில் யஜுர் வேத ஜடா பாராயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1982-ம் ஆண்டு சதாரா யாத்திரையின்போது ஸ்ரீமகாஸ்வாமிகள் வேத பரீக்ஷையில் உபந்யாசம் செய்தார். அப்போது அவர், ஶ்ரீ சம்ஹிதை பாராயணம் செய்தால் ஒரு மடங்கும், பதம் பாராயணம் செய்தால் இரண்டு மடங்கும், கிரமம் பாராயணம் செய்தால் நான்கு மடங்கும் பலன் கிடைக்கும். அதேநேரம் ஜடை பாராயணம் செய்தால், ஆயிரம் மடங்கு பலன் உண்டு என்று அருளியுள்ளார்.
அப்போது அவர், ‘‘சிவனுக்கு ஜடாதரன் என்று பெயர். காயத்ரீ மந்திரத்துக்கு ருத்ரன் சிகை என்று பெயர். அதனால்தானோ என்னவோ, தன் பெயருடைய ‘ஜடா பாராயணத்துக்கு’ ஆயிரம் மடங்கு (1000) அதிக பலன்’’ என்று புன்முறுவலுடன் வேடிக்கையாகக் குறிப்பிட்டார். தானே சிவன் என்பதைக் கூட இப்படி விளையாட்டாகவும், மறைபொருளாகவும் கூறியிருக்கலாம் மகா பெரியவா!

இந்தக் காலகட்டத்தில் அதாவது ஜூன் 2 முதல் 16-ம் தேதி வரையிலும், காசி க்ஷேத்திரத்தில் வேதம் பயிலும் 100 மாணவர்களுக்கும், வேதம் பயின்று தேர்ந்த வேத விற்பன்னர் களுக்கும், யாத்ரீகர்களுக்கும், உணவும், இடவசதியும், வேத ஸ்ரவணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காலகட்டத்தில் காசியில் உள்ள முக்கியமான திருக்கோயில்களில் பிரதி தினம் அபிஷேக, ஆராதனைகள் ஜடா பாராயணத்துடன் நடைபெற உள்ளன.

பக்தர்கள் கவனத்துக்கு...
ஜூன் 2 முதல் 16-ம் தேதி வரையிலும் மகா பெரியவரால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீகாஞ்சி காமகோடீஸ்வரர் கோயிலில் (அனுமான்காட், வாரணாசி) தினசரி காலை வேளையில் வேத பாராயணம் நடைபெறும்.

ஜூன் - 2: மாலையில் ஸ்ரீசிந்தாமணி கணபதி, தேதார் காட்.
ஜூன் - 3: ஶ்ரீ காசிவிஸ்வநாதர் கோயில்
ஜூன் - 4: ஶ்ரீ பிந்து மாதவர் க்ஷேத்திரம்
ஜூன் - 5: ஶ்ரீ காசி விஸ்வநாதர் கோயில்
ஜூன் - 6: ஶ்ரீ தண்டபாணி கோயில்
ஜூன் - 7: ஶ்ரீ காலபைரவர் கோயில்
ஜூன் - 8: ஶ்ரீ வந்தே காளிம் கோயில் (கர்ண கன்டா)
ஜூன் - 9: ஶ்ரீ குஹாம் கங்கா கோயில்
ஜூன் - 10: ஶ்ரீ அன்ன பூரணி கோயில்
ஜூன் - 11: ஶ்ரீ மணிகர்ணிகா (ஸ்ரீ சக்கர தீர்த்தம்)
ஜூன் - 12: ஶ்ரீ காசி விசாலாக்ஷி கோயில்
ஜூன் - 13: ஶ்ரீ கௌரி கேதாஸ்வரீஸ்வரர் கோயில்
ஜூன் - 14: ஶ்ரீ சக்ரலிங்கேஸ்வரர் கோயில்
ஜூன் - 15: ஶ்ரீ வனதுர்கா கோயில்
ஜூன் - 16: ஶ்ரீ மடம்.

வஸந்த ருதுவில் யாக, யக்ஞங்கள் நடப்பது மிகவும் சிறப்பா னது என்று வேதமே கூறுகிறது. அற்புதமான இந்த வஸந்த ருதுவில், யஜுர் வேத ஜடா பாராயணம் எனும் வேத யக்ஞமும், அன்ன யக்ஞமும், மகாபெரியவரின் பக்தர்களால் நடைபெற இருப்பதால், அன்பர்கள் தங்களால் இயன்ற பொருள் உதவியும் மற்றும் திரவிய சகாயமும் செய்து இறை அருளுக்கும், குரு அருளுக்கும் பாத்திரமாகும்படி கேட்டுக் கொள்கிறோம்.