Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருக்கரவாசலில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழா!

திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய  ஆன்மிகத் திருத்தலம் திருக்கரவாசல். இங்கு வைகாசி விசாகத் தேர் திருவிழா 31.5.2015, ஞாயிறு அன்று காலை நடைபெற்றது. உற்சவ மூர்த்தியாக நடராஜர் நான்கு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.


கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றான  திருக்கரவாசல் தேரோட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் பதினெட்டு நாள் உற்சவமாக நடக்கும் இந்த வைகாசி பெருவிழா, தற்போது 1௦ நாளாக குறுகிப் போய்விட்டது. 

 


தேரோட்டமும் சிறப்பாக நடைபெற்றது. வெயிலால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள உஷ்ணத்தை தணிக்க தேர்த் திருவிழாவில் அனைவருக்கும் மொந்தம் வாழைப்பழம் தரப்பட்டது. மேலும், அடுத்த கட்டமாக இரண்டாவது தேர் செய்வதற்கான வேலைகள் துவங்க வேண்டும் எனவும், தேர் இழுத்த பரவலான திருக்கரவாசல்  மக்கள் தெரிவித்தனர்.

 

த.க.தமிழ் பாரதன்

(மாணவ பத்திரிகையயாளர்)

புகைப்படங்கள்:க.சதீஷ்குமார்