வார ராசிபலன் : மிதுனம்

வார ராசிபலன்: 19-2-2016 முதல் 25-2-2016 வரை

மிதுனம்: மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய.

உங்கள் ராசிக்கு  3-ல் ராகுவும் 6-ல் சனியும் 8-ல் புதன், சுக்கிரன் ஆகியோரும் உலவுவது விசேடமாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் நலம் உண்டாகும் நேரமிது. நல்ல தகவல் கிடைக்கும். திறமைக்குரிய பயனைப் பெறுவீர்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். எதிர்பாராத திடீர்ப் பொருள் வரவு உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். புதியவர்களது தொடர்பு பயன்படும். பயணத்தின் மூலம் ஒரு எண்ணம் நிறைவேறும். கேளிக்கை, உல்லாசங்களிலும், விருந்து உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும் நேரமிது. தொழிலாளர்கள், விவசாயிகள், போக்குவரத்து இனங்களைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். தந்தை நலனில் அக்கறை தேவைப்படும். பொருளாதாரம் சம்பந்த்மான காரியங்களில் விழிப்புத் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி  19, 22, 24, 25 (பிற்பகல்).

திசைகள்:  மேற்கு, , வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.

எண்கள்: 4, 5, 6, 8.

22-02-2016 முதல் 22-02-2016 வரை

 

22-02-2016 முதல் 22-02-2016 வரை