Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேலைவாய்ப்பை வசப்படுத்தும் புராஜெக்ட் வொர்க்!

ல்லூரி மாணவர்கள் தங்களின் திறன் அளவுகோளான புராஜெக்ட்டுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பை வசப்படுத்தவல்ல புராஜெக்ட் அணுகுமுறை குறித்த அறிவுரைகளை வழங்குகிறார், சென்னை எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியின் எலெக்ட்ரிக்கல்ஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவர், பேராசிரியர் டாக்டர் காமராஜ்.

பிடித்த பிரிவில் புராஜெக்ட்!

‘‘பொதுவாக முதலாம் ஆண்டு இன்ஜினீயரிங் மாணவர்கள் அனைவரும் பொதுப் பாடங்களைப் படிப்பார்கள். இரண்டாம் ஆண்டிலிருந்து இறுதி யாண்டு வரை தங்களின் துறை சார்ந்த பாடங்களைப் படிக்க ஆரம்பிப்பார்கள். இந்த மூன்று ஆண்டுகளில் தங்களின் துறையிலேயே ஏராளமான பாடப் பிரிவுகளைப் படிப்பார்கள். உதாரணமாக, மெக் கானிக்கல் மாணவர்கள் ஆட்டோமொபைல், தெர்மல், வெல்டிங், கேட் - கேம் (CAD - CAM),

ஸ்ட்ரெங்த் ஆஃப் மெட்டீ ரியல் என பல பிரிவுகளை கற்பார்கள். இதில் தங்களுக் குப் பிடித்த பிரிவை புராஜெக்ட்டுக்குத் தேர்வு செய்து, வெற்றிகரமாக முடிக்கலாம். 

புராஜெக்ட்டை பயமின்றி அணுக...

மாணவர்கள் முதலாம் ஆண்டிலிருந்து தங்களின் துறை சார்ந்த டெக்னிகல் அறிவைப் பெற வேண்டும். அதற்கு சிறந்த கல்லூரிகளில் ஏராளமான பேப்பர் பிரசன்டேஷன்கள் செய்யலாம். இதனால் ஆரம்பத்திலிருந்தே மேடை பயம் தவிர்க்கப்படுவதோடு, படிப்பு சார்ந்த எல்லா செயல்பாடுகளிலும் தயக்கத்தையும் பதற்றத்தையும் விரட்டலாம். மேலும் டெக்னிகல் அறிவையும் அதிகளவில் பெற முடியும். தவிர, மூன்றாம் ஆண்டிலேயே மினி புராஜெக்ட் செய்யலாம். இது இறுதி ஆண்டு மெயின் புராஜெக்ட்டை சிக்கனமாகவும், வெற்றிகரமாகவும் முடிக்க வழிவகுக்கும்.

குரூப் புராஜெக்ட்... குட்!

பொருட் செலவைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக நான்கு மாணவர்கள் இணைந்து குரூப் புராஜெக்ட் செய்யும்போது, அனைவரும் வேலையை சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டியது அவசியம். புராஜெக்ட்டின் டெக்னிக் கல் தகவல்கள் அனைத்தையும் அங்கத்தினர் அனைவரும் தெரிந்து வைத்திருப்பதுதான் ஒரு நல்ல புராஜெக்ட் குரூப். மேலும் புராஜெக்ட் கைடுடனும் அனைவரும் இணைந்து சிறப்பான முறையில் செயல்பட வேண்டியதும் அவசியம்.

சொந்த திறமைக்கு மட்டுமே சல்யூட்!

புராஜெட்டுக்காக புதிய கண்டுபிடிப்புகளை செய்யவேண்டிய கட்டாயமில்லை. ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவியில், ஏதாவது சில மாற்றங்களைக் காட்டினாலே போதும். எளிமையாக இருந்தாலும் அந்தக் கண்டுபிடிப்பை புதுமையாகவும், சொந்தமாகவும் செய்ய வேண்டியதே முக்கியம். ஆனால், இன்று பல மாணவர்களும் இறுதி நேரத்தில் புராஜெக்ட் சென்டரில் பணம் கொடுத்து புராஜெக்ட்டை தயார் செய்கிறார்கள்.  இதனால் டெக்னிகல் அறிவு கிடைக்காமல் போவதுடன், அது வேலைவாய்ப்பையும் கடினமாக்கும்.

புராஜெக்ட்டில் கோட்டைவிட்டால்...

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக கல்லூரியை விட்டு வெளியேறுகிறார்கள். அதில் பாதிக்கும் குறைவானவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். இதற்கு, அவர்கள் புராஜெக்ட்டில் போதிய அக்கறையும் கவனமும் செலுத்தாததும் முதன்மைக் காரணம். 80% மதிப்பெண்கள் பெற்றும் போதிய டெக்னிகல் அறிவுத்திறன் இல்லாததால் வேலை கிடைக்காமல் போகும் மாணவர்கள் ஏராளம். அதேபோல, 60% மதிப்பெண்களுடன் அரியர் வைத்தும் டெக்னிகல் அறிவில் சிறந்து விளங்கி வேலைவாய்ப்பை வசப்படுத்திய மாணவர்கள் இன்னொரு புறம். அதனால், தியரிட்டிகல் நாலெட்ஜைவிட டெக்னிகல் நாலெட்ஜ்தான் அவசியம் என்பதை உணர்ந்து, மாணவர்கள் புராஜெக்ட்டுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

புராஜெக்ட் ஹைலைட்ஸ்!

 பொறியியல் மாணவர்கள் தங்களின் துறை சார்ந்த நேர்காணல்களில் நிச்சயம் அவர்களின் புராஜெக்ட் பற்றிய கேள்வியை எதிர்கொள்வார்கள். புராஜெக்ட்டில் மாணவர்களின் பங்களிப்பையும், ரிசல்ட்டையும் பொறுத்தே வேலைவாய்ப்பு சாத்தியமாகும்.

 மாணவர்கள் இறுதி ஆண்டு படிக்கும்போது, தங்களின் துறை சார்ந்த நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் மற்றும் இன் பிளான்ட் டிரெயினிங் புராஜெக்ட்களை பலருக்கும் பயனுள்ள வகையிலும், அந்த நிறுவனத்துக்கு பயன்தரக்கூடிய வகையிலும் செய்யும்போது, அந்நிறுவனத்துக்கு மாணவர்களின் புராஜெக்ட் மற்றும் செயல்பாடு பிடித்திருந்தால், அங்கேயே வேலை பெறும் வாய்ப்புள்ளது. மேலும், நல்ல புராஜெக்ட் திட்டமும், உத்வேகமும் இருந்தால், அந்த நிறுவனமேகூட புராஜெட்டுக்கு உதவித்தொகையும் வழங்கும்.

 மக்களுக்குத் தேவையான கண்டுபிடிப்புகளை வடிவமைக்கும் திறமை இருந்தால், புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் பல நிறுவனங்களையும் திரும்பிப் பார்க்க வைக்கலாம். அப்போது இறுதியாண்டு புராஜெக்ட் உங்கள் புரொஃபைலின் பலம் கூட்டும்.

 குரூப் புராஜெக்ட்களில் கூட்டு உழைப்பைக் கற்றுக்கொள்ளலாம். அந்த அனுபவங்கள், பின்னாளில் வேலை, தொழில் என்று எந்தப் பாதையில் பயணித்தாலும் டீம் வொர்க் ஸ்பிரிட் கொடுக்கும்.

 படித்து முடித்துவிட்டு வேலை இல்லை என்று புலம்பாமல் இருக்க, படிக்கும்போதே புராஜெக்ட்டுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தால்... ஆல் இஸ் வெல்!’’

கு.ஆனந்தராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
அவள் 16
காலம் கடந்து போகும்... காயம் பழகிப் போகும்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close